azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 23 Nov 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 23 Nov 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

I utter no meaningless word. I do no purposeless deed. I plan no significance-less action. I never engage in unholy activities. I have nothing that I need. My joy consists in fulfilling your aims, and in making you reach the goal. The one thing that I ask for is a love-filled heart. Believe and hold fast, without entangling yourselves in a mesh of empty explanations and imaginary arguments — that is the way to profit. Do not develop attachment to this body. Why, attachment to any body is not desirable. This hand gives you things, but My hand is that which creates all this. My course is unique, different from all that you know. I do not identify Myself with anything. Ice is water, water is ice. The Form (saguna) is without form (nirguna), without form is this form. I am incomprehensible. The Lord’s Form can be perceived only by means of the eye of love (prema) or the eye of wisdom (jnana) or the eye of yoga, not the eye of sensual activity. - Divine Discourse, Oct 25, 1961.
DEMAND FROM ME THE REMOVAL OF YOUR SUFFERINGS, AS A RIGHT.
GIVE ME YOUR HEART AND ASK FOR MY HEART. - BABA
நான் அர்த்தமற்ற எந்த வார்த்தையையும் கூறுவதில்லை. நான் எந்த குறிக்கோளற்ற செயலையும் ஆற்றுவதில்லை.நான் எந்த முக்கியத்துவமற்ற செயலையும் திட்டமிடுவதில்லை. நான் ஒரு போதும் புனிதமற்ற பணிகளில் ஈடுபடுவதில்லை. எனக்கு என்று வேண்டுவது எதுவும் இல்லை. உங்களது குறிக்கோள்களைப் பூர்த்தி செய்வதிலும், உங்களை குறிக்கோளை அடையச் செய்வதிலுமே எனது ஆனந்தம் உள்ளது. ஒரு ப்ரேமை நிரம்பிய இதயம் ஒன்றே நான் விரும்பிக் கேட்கும் பொருளாகும்.உங்களை நீங்களே வெற்று விளக்கங்கள் மற்றும் கற்பனையான விவாதங்கள் என்ற ஒரு வலையில் சிக்கி விடாது இருக்குமாறு செய்து கொண்டு, நம்பிக்கை வைத்து இறுகப் பற்றிக் கொள்ளுங்கள்- அதுவே லாபம் அடைவதற்கான வழியாகும். இந்த உடலின் மீதான பற்றினை வளர்த்துக் கொள்ளாதீர்கள்.ஏன், எந்த உடலின் மீதான பற்றும் விரும்பத் தக்கதல்ல. இந்தக் கை உங்களுக்குப் பொருட்களைக் கொடுக்கிறது; ஆனால், எனது கரமோ இவை அனைத்தையுமே படைப்பதாகும். நீங்கள் அறிந்த அனைத்திலுமிருந்து மாறுபட்ட, தனித்தன்மை வாய்ந்த பாதை என்னுடையது. நான், என்னை, எந்தப் பொருளோடும் இனம் கண்டு கொள்ளுவதில்லை. பனிக்கட்டியே நீர், நீரே பனிக்கட்டி. ரூபமே (சகுண), அரூபம் (நிர்குண), ரூபமற்றதே இந்த ரூபம். நான் புரிந்து கொள்ள முடியாதவன். இறைவனது ரூபத்தை, புலன்களின் செயல்பாட்டுக் கண்களால் அல்லாது, ப்ரேமை அல்லது ஞானம் அல்லது யோகக் கண்ணின் மூலம் மட்டுமே காண முடியும்.
ஒரு உரிமையுடன், உங்களது துன்பங்களை நீக்க வேண்டும் என்று என்னைக் கோருங்கள்.உங்கள் இதயத்தை அளித்து , என் இதயத்தைக் கேளுங்கள்- பாபா