azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 22 Nov 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 22 Nov 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

The convocation in hermitages marked the close of a sweet chapter in life when ideals to be pursued in later years were implanted. The advice given by gurus during convocations was, "Consider mother as God, consider father as God, consider teacher as God, and consider the guest as God." Follow this fourfold exhortation with full faith in its validity, derive bliss therefrom and inspire others by your example, so that the Motherland may progress and prosper. Your parents are sacrificing their comforts and even necessities in order to ensure your progress. It is your duty to revere them and make them happy. First, render your homes bright by pleasing your parents. Do not be arrogant towards your parents because you have studied a few things. Engage yourselves in acts that others will respect and not in acts of which you feel ashamed of. Do not allow your minds to get agitated with limitless desires. Love your native land. Fulfil this desire of mine, with My blessings! - Divine Discourse, Nov 22, 1986
MOTHER AND MOTHERLAND ARE MORE WORTHY OF REVERENCE THAN HEAVEN. - BABA
ஆசிரமங்களின் பட்டமளிப்பு விழா, வாழ்க்கையின் ஒரு இனிமையான அத்தியாயம் பூர்த்தி அடைவதைக் குறிப்பதாகும்; அப்போது, வரும் காலங்களில் பின்பற்ற வேண்டிய இலட்சியங்கள் மனதில் பதிக்கப் பட்டன. அந்த பட்டமளிப்பு விழாக்களின் போது குருமார்கள் அளித்த அறிவுரை, ’’ தாயைத் தெய்வமாகக் கருது, தந்தையைத் தெய்வமாகக் கருது, குருவைத் தெய்வமாகக் கருது மற்றும் விருந்தினரைத் தெய்வமாகக் கருது ‘’ என்பதே ஆகும். இந்த நான்கு விதமான அறிவுரையை, அதன் நம்பகத் தன்மையில் முழு விசுவாசம் வைத்துப் பின்பற்றி, அதிலிருந்து ஆனந்தம் பெறுவதோடு, உங்களது முன்னுதாரணத்தின் மூலம் மற்றவர்களுக்கும் உத்வேகம் அளியுங்கள்; அதனால், தாய்நாடு முன்னேறி வளம் பெறட்டும். உங்கள் முன்னேற்றத்தை உறுதி செய்வதற்காக, உங்கள் பெற்றோர் தங்கள் வசதிகள் மற்றும் தேவைகளையும் கூடத் தியாகம் செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களைப் போற்றி, சந்தோஷப்படுத்துவது உங்களது கடமையாகும். முதலில், உங்களது பெற்றோரை மகிழ்வித்து, உங்களது இல்லங்களை பிரகாசிக்கச் செய்யுங்கள். நீங்கள் சில விஷயங்களைப் படித்து இருக்கிறீர்கள் என்பதால், உங்களது பெற்றோரிடம் ஆணவமாக நடந்து கொள்ளாதீர்கள். நீங்களே வெட்கித் தலைகுனியும் செயல்களில் அல்லாது, மற்றவர்கள் மதிக்கும் செயல்களில் உங்களை நீங்களே ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். வரையற்ற ஆசைகளால், உங்கள் மனங்கள் கலக்கம் அடைவதை அனுமதிக்காதீர்கள். உங்கள் தாய்நாட்டை நேசியுங்கள். எனது இந்த விருப்பத்தை, என் ஆசிகளுடன் பூர்த்தி செய்யுங்கள்!
தாயும், தாய்நாடும், ஸ்வர்கத்தை விடவே அதிகம் போற்றத்தக்கவை- பாபா