azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 21 Nov 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 21 Nov 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
“Help ever, hurt never” - That is true liberation! To get rid of moha (attachment) is true moksha (liberation). Do not try to find faults with others. If you point an accusing finger at someone, remember that three fingers are pointing at you. Satyam kanthasya bhushanam (Truth is the true ornament to the neck), and Hastasya bhushanam danam (charity is the true ornament to the hand). Your hands are useless if they do not perform acts of charity. You have to sanctify each limb of your body in sacred activities. You should empathise with those who are in difficulties and try to give them solace. Comfort and console them with soothing words. Those who talk harsh words are verily demons. If you hurt others’ feelings, you will be hurt twice as much. You cannot escape the consequences of your actions. You have to bear this truth in mind. Your life will be sanctified when you conduct yourselves in a manner not to hurt others! - Divine Discourse, Nov 19, 2002.
THE PERSON DEVOTED TO GOD KNOWS NO FAILURE. THE NAME OF THE LORD,
IF TAKEN SINCERELY OVERCOMES ALL OBSTACLES. - BABA
“எப்போதும் உதவுங்கள், ஒருபோதும் தீங்கிழைக்காதீர்கள்’- அதுவே உண்மையான விடுதலையாகும்! மோஹத்தை (பற்றுதலை) விட்டு விடுவதே, உண்மையான மோக்ஷம் (விடுதலை) ஆகும். மற்றவர்களிடம் குறை காண முயலாதீர்கள். நீங்கள் யார் மீதாவது குற்றம் சாட்டுவதற்கு ஒரு விரலை நீட்டினால், மூன்று விரல்கள் உங்களைச் சுட்டிக் காட்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஸத்யம் கண்டஸ்ய பூஷணம் (சத்தியமே பேச்சுக்கான உண்மையான ஆபரணம்), ஹஸ்தஸ்ய பூஷணம் தானம் (தானமே கைகளுக்கான உண்மையான ஆபரணம்). அவைகள் தானங்களைச் செய்யா விட்டால், உங்கள் கரங்கள் பயனற்றவையே. புனிதச் செயல்களால் உங்களது உடலின் ஒவ்வொரு அங்கத்தையும் நீங்கள் பரிசுத்தமாக்க வேண்டும். துன்பத்தில் இருப்பவர்களுக்காகப் பச்சாதப்பட்டு, நீங்கள் அவர்களுக்கு ஆறுதல் அளிக்க வேண்டும். இதமான வார்த்தைகளால், ஆதரவு அளித்து ஆறுதல் கூறுங்கள். கடுமையான வார்த்தைகளைப் பேசுபவர்கள் உண்மையில் அரக்கர்களே. நீங்கள் பிறரது உணர்வுகளைப் புண்படுத்தினால், நீங்கள் அதைப் போல இரு மடங்கு புண்படுத்தப் படுவீர்கள். உங்களது செயல்களின் விளைவுகளிலிருந்து நீங்கள் தப்பவே முடியாது.இந்த உண்மையை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். பிறரைப் புண்படுத்தாத முறையில் நீங்கள் உங்களையே நடத்திக் கொண்டால்,உங்களது வாழ்க்கை புனிதமடையும் !
இறைவனது பக்தன் தோல்வியையே அறியாதவன். உளமாற ஏற்றுக் கொள்ளப் பட்டால்,இறைவனது திருநாமம் அனைத்து தடைகளையும் வென்று விடும்- பாபா