azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 10 Nov 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 10 Nov 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Mind wills, yearns, prompts and insists on effort and action. This process is called sankalpa, these are like sasanas (commands). Everyone has to be aware of the variety and validity of actions induced by these promptings. Mind is host to fifty million such! Of thoughts that appear and vanish like clouds that pass silently, many stay and stir the mind into activity. These are sankalpas. Until these are understood against their vast background, one cannot live happily and in peace. Good sankalpas elicit best out of one and help one to use all strength for uplift. A person has to recognise bad sankalpas or urges as soon as they arise, render them ineffective by systematic cultivation of beneficial sankalpas. These alone can save from disaster and keep one close to Prasanthi (supreme calm). Ships at sea are guided by compass along desired direction; without it, they risk being wrecked. Man has to sail safe across the ocean of samsara (worldly existence). (Divine Discourse, Jul 10, 1986)
EVERYONE NEEDS A ONE-POINTED AGITATION-LESS MIND TO GUIDE YOU AND GUARD YOU. - BABA
மனம் விரும்புகிறது, ஏங்குகிறது, உந்துகிறது மேலும் முயற்சி மற்றும் செயல்பாட்டை வலியுறுத்துகிறது.இந்தக் கட்டளைகள் போன்ற செயல்முறையே ஸங்கல்பம் எனப்படுகிறது. இந்த உந்துதல்களினால் தூண்டப்படும் செயல்களின் வகைகள் மற்றும் நியாயத்தன்மையைப் பற்றி ஒவ்வொருவரும் உணர்ந்திருக்க வேண்டும்.இப்படித் தோன்றி, அமைதியாகக் கலைந்து விடும் மேகங்களைப் போன்று மறைந்து விடும், ஐந்து கோடி எண்ணங்களுக்கு மனம் இடமளிக்கிறது; இவற்றில் பல மனதில் தங்கி அதை செயலில் ஈடுபடும் அளவிற்கு உசுப்பி விட்டு விடுகின்றன.இவையே ஸங்கல்பங்கள். அவற்றின் பரந்த பின்னணி புரிந்து கொள்ளப்படும் வரை, ஒருவர் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ முடியாது. நல்ல ஸங்கல்பங்கள், ஒருவரிடமிருந்து மிகுந்த நல்லவற்றை வெளிக் கொணர்ந்து, ஒருவர் தனது அனைத்து சக்தியையும் முன்னேறுவதற்குப் பயன்படுத்த உதவுகின்றன. ஒருவர், தீய ஸங்கல்பங்கள் அல்லது உந்துதல்களை அவை தோன்றிய உடனேயே இனம் கண்டு கொண்டு, நன்மை பயக்கும் ஸங்கல்பங்களை முறையாக வளர்த்துக் கொள்வதன் மூலம், அவற்றை செயலிழக்கச் செய்ய வேண்டும். இவை மட்டுமே ஒருவரை பேரிடரிலிருந்து காப்பாற்றி, ஒருவரை பிரசாந்திக்கு அருகில் இருக்க வைக்கும். கடலில் செல்லும் கப்பல்கள் திசைகாட்டியின் மூலம் வழி நடத்தப் படுகின்றன; அது இல்லை என்றால், அவை அழியக்கூடிய அபாயம் ஏற்படும். மனிதனும் கூட, ஸம்ஸாரம் எனும் சாகரத்தை பத்திரமாகக் கடந்தாக வேண்டும்.
உங்களை வழிநடத்திக் காப்பதற்கு, ஒவ்வொருவருக்கும் ஒருமுனைப்பான கலக்கமற்ற மனம் வேண்டும் - பாபா