azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 01 Nov 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 01 Nov 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Good and bad lie in your mind; they are not outside. Hence correct your feelings in the first instance. Get rid of all animal qualities so that humanness can blossom in you. If you notice even a trace of hatred in yourself, drive it away at once. Having attained human birth, it is shameful on your part to have evil qualities like hatred. Do not fall prey to infatuation. You should be attracted only towards God and none else. You love your son because you consider him to be your reflection. In fact, the one who loves you, the one who hates you, or the one who criticises you - all are your own reflections. At one time, one may be angry and later the anger may give way to love. Love God with all your heart. Love for God will transform your heart. It will drive away hatred and other evil qualities. You can achieve anything through love. (DIVINE DISCOURSE, FEB 26, 2006)
THE BEST SPIRITUAL DISCIPLINE IS TO STRENGTHEN YOUR INWARD VISION. - BABA
நல்லவையும், கெட்டவையும் உங்கள் மனதில் தான் இருக்கின்றன; அவை வெளியில் இல்லை. எனவே, முதன் முதலில் உங்களது உணர்வுகளைச் சரி செய்து கொள்ளுங்கள். மனிதத்துவம் உங்களுள் மலருவதற்கு ஏற்றவாறு, அனைத்து மிருக குணங்களையும் விட்டொழியுங்கள்.உங்களுள் நீங்கள், வெறுப்பின் ஒரு சிறு சுவடைக் கண்டால் கூட, அதை உடனே விரட்டி அடித்து விடுங்கள்.மனிதப் பிறவியைப் பெற்ற பிறகு,தீய குணங்களான வெறுப்பு போன்றவற்றைக் கொண்டிருப்பது உங்கள் தரப்பில் வெட்கட்கேடாகும். மயக்கத்திற்கு இரையாகி விடாதீர்கள். நீங்கள் இறைவன் பால் மட்டுமே ஈர்க்கப்பட வேண்டுமே அன்றி, வேறு எவரும் மீதும் அல்ல. உங்களுடைய பிரதிபலிப்பு என்று நீங்கள் அவனைக் கருதுவதால், நீங்கள் உங்கள் மகனை நேசிக்கிறீர்கள்.உண்மையில், உங்களை நேசிப்பவர், உங்களை வெறுப்பவர் அல்லது உங்களைத் தூற்றுபவர்- இந்த அனைவருமே உங்களது பிரதிபலிப்புகள் தான். ஒரு சமயம் ஒருவர் கோபப் படலாம்; பின்னர் அந்தக் கோபமே ப்ரேமையாக மாறலாம். உங்கள் இதயபூர்வமாக இறைவனை நேசியுங்கள். இறைவன் பால் கொள்ளும் ப்ரேமை உங்கள் இதயத்தை நல்மாற்றம் அடையச் செய்யும். அது, வெறுப்பு மற்றும் பிற தீய குணங்களை விரட்டி விடும். நீங்கள் ப்ரேமையின் மூலம் எதையும் சாதிக்கலாம்.
தலைசிறந்த ஆன்மீக சாதனை உங்களது
அக திருஷ்ட்டியை வலுப்படுத்துவதே - பாபா