azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 18 Oct 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 18 Oct 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
The progress of modern technology, by polluting the atmosphere with carbon dioxide smoke, is causing a threat to life on earth. This smoke has already created a hole in the ozone ring above the earth which has been serving as a protecting cover against harmful radiation from the Sun. If the ozone layer is destroyed, the effect of the Sun's rays may be disastrous. All nations are now worried about this threat. All that needs to be done to avert this danger is to reduce the pollution of the atmosphere caused by automobiles and industrial effluents. Economy in the use of every natural resource is vital. Pollution of the air has many evil consequences. The Navaratri celebration is an occasion for revering Nature and also for considering how natural resources can be used properly in the best interests of mankind. Resources like water, air, power and minerals should be used properly and not misused or wasted (Divine Discourse, Sep 27, 1992)
THERE IS NO GREATER EXAMPLE OF SELFLESS LOVE THAN NATURE. - BABA
நவீன கால பொறியியல் முன்னேற்றம், கரியமில வாயுப் புகையால் வான் மண்டலத்தை மாசு படுத்தி, பூமியில் உயிர் வாழ்வதற்கே ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது. பூமிக்கு மேல், சூரியனிலிருந்து வரும் தீங்கு விளைவிக்கும் கதிர் வீச்சிற்கு எதிராக ஒரு கவசமாக பணியாற்றிக் கொண்டிருக்கும் ஓஸோன் மண்டலத்தில், இந்தப் புகை ஏற்கனவே ஒரு துளையை ஏற்படுத்தி விட்டது. இந்த ஓஸோன் மண்டலம் அழிக்கப்பட்டு விட்டால், சூரிய கதிர்களின் பாதிப்பு பேரிடராக இருக்கக் கூடும். அனைத்து நாடுகளும் இப்போது, இந்த அச்சுறுத்தலைப் பற்றிக் கவலை கொண்டிருக்கின்றன. இந்த ஆபத்தைத் தவிர்ப்பதற்கு செய்ய வேண்டியதெல்லாம், மோட்டார் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளால் வான் மண்டலத்தில் ஏற்படும் மாசைக் குறைப்பது தான். ஒவ்வொரு இயற்கை வளத்தைப் பயன்படுத்துவதிலும் மிதமாக இருப்பது அத்தியாவசியமாகும். காற்றில் ஏற்படும் மாசு பல தீங்கான விளைவுகளைக் கொண்டது. நவராத்ரி பண்டிகைக் கொண்டாட்டங்கள், இயற்கையை மதிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமே; மேலும், இயற்கை வளங்களை மனித குலத்தின் மிகச் சிறந்த நன்மைக்கு எவ்வாறு முறையாகப் பயன்படுத்தலாம் என்பதை ஆலோசிப்பதற்காகவுமே. இயற்கை வளங்களான நீர், காற்று,சக்தி மற்றும் தாதுப்பொருட்களை முறையாகப் பயன்படுத்த வேண்டுமே அன்றி, தவறாகப் பயன்படுத்தவோ அல்லது வீணடிக்கவோ கூடாது!
தன்னலமற்ற ப்ரேமைக்கு, இயற்கையை விடச்
சிறந்த உதாரணம் எதுவும் இல்லை - பாபா