azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 11 Oct 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 11 Oct 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

The Lord cares for ekagrata and chitta-suddhi (concentration and purity of mind). You need not feel that you are physically away from Him. He has no 'near' and 'far'. Provided the address is clear and correct, your letter will be delivered, either at the next street or at Calcutta or Bombay for the same stamp. Smarana (remembering) is the stamp; manana (recapitulation) is the address. Have the Name for smarana; the Form for manana, that is enough. Select one Name and one Form for smarana and manana; but, do not talk ill of other names and forms. Behave like the woman in a joint family; she respects and serves the elders of the family such as the father-in-law, and his brothers and her own brother-in-law, but her heart is dedicated to her husband, whom she loves and reveres in a special manner. If you carp at the faith of others, your devotion is fake. If you are sincere, you will appreciate the sincerity of others. You see faults in others because you yourself have those faults, not otherwise. (Divine Discourse, Aug 15, 1964)
THERE IS NO GREATER SPIRITUAL PRACTICE THAN ADHERING
TO THE PRINCIPLES OF TRUTH AND LOVE. - BABA
இறைவன், ஏகாக்ரதா மற்றும் சித்த சுத்தி (ஒருமித்த மனக்குவிப்பு மற்றும் மனத்தூய்மை) ஆகியவற்றையே எதிர் பார்க்கிறான்.நீங்கள் உடல் ரீதியாக அவனிடமிருந்து வெகு தொலைவில் இருப்பதாக எண்ண வேண்டாம். அவனுக்கு, ‘’ அருகில் ‘’ மற்றும் ‘’ தொலைவு ‘’ என்பதெல்லாம் இல்லை. விலாசம் தெளிவாகவும், சரியாகவும் இருக்குமானால், அதே தபால் தலைக்கு, அடுத்த தெருவோ அல்லது கல்கத்தாவோ அல்லது பம்பாயோ, உங்களது கடிதம் சென்றடைந்து விடும். ஸ்மரணமே (நினைவு கூர்தல்) தபால் தலை; மனனமே (சிந்தித்துப் பார்த்தல்) விலாசம். இறை நாமத்தை ஸ்மரணத்திற்கும், இறைரூபத்தை மனனத்திற்கும் கொண்டு இருங்கள், அதுவே போதுமானதாகும். இறைவனது ஒரு திருநாமத்தையும், ஒரு ரூபத்தையும் முறையே ஸ்மரணம் மற்றும் மனனத்திற்குத் தேர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால், மற்ற திருநாமங்களையும், ரூபங்களையும் குறித்து இகழ்ச்சியாகப் பேசாதீர்கள். கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் ஒரு பெண்மணியைப் போல இருங்கள். மாமனார், அவரது சகோதரர்கள், அவளது சொந்த மைத்துனர் ஆகிய பெரியவர்களை அவள் மதித்து, அவர்களுக்கு அவள் சேவை செய்கிறாள்; ஆனால், ஒரு தனிப்பட்ட முறையில் அவள் நேசித்துப் போற்றும் கணவருக்குத் தான் அவளது இதயம் அர்ப்பணிக்கப் பட்டு இருக்கும். பிறரது மதத்தை நீங்கள் இகழ்வீர்கள் என்றால், உங்கள் பக்தி போலியானதே. நீங்கள் சிரத்தையானவர்கள் என்றால், பிறரது சிரத்தையையும் பாராட்டுவீர்கள். நீங்கள் பிறரிடம் குறை காண்கிறீர்கள் ஏனென்றால் உங்களிடமே அந்தக் குறைகள் இருக்கின்றன, மாறாக இல்லை.
சத்யத்தையும், ப்ரேமையையும் பற்றி ஒழுகுவதைவிடச்
சிறந்த ஆன்மீக சாதனை வேறு எதுவும் இல்லை- பாபா