azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 09 Oct 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 09 Oct 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Reform the body, reconstruct the mind, and regulate the way of living; then, the country will become automatically strong and prosperous. Do not wail that it is a mud pot if it contains nectar; it is far better than having a gold pot with poison in it. The land may be rich, but if life is mean, it is deplorable. It does not matter if the standard of life is poor, provided the way of life is pure, full of love, filled with humility, fear-of-sin, and reverence towards elders. It is easy to restore this way of life, provided the Vedas are once again studied and followed. The Vedamatha (mother of Vedas) will foster in you love and kindness. Have faith; do not discard a diamond, dismissing it as a piece of glass. The Dharma laid down in the Vedas is the best armour to guard you against sorrow. (Divine Discourse, Aug 15, 1964)
JUST AS WHOLESOME FOOD GIVES HEALTH AND STRENGTH TO THE BODY,
PRAYER PURIFIES THE MIND AND STRENGTHENS THE SPIRIT. - BABA
உடலை சீர்திருத்தி, மனதை சீரமைத்து, வாழும் முறையை சீர் படுத்துங்கள்; பின்னர் தேசம் தானாகவே வலுவாகவும், வளமாகவும் ஆகி விடும். அமுதமே உள்ளே இருந்தாலும், அது ஒரு மண் பானையாக இருக்கிறதே என்று புலம்பாதீர்கள்; விஷத்தை வைத்துள்ள ஒரு தங்கப் பானையை விட அது எவ்வளவோ மேலானது. தேசம் வளமாக இருக்கலாம், ஆனால் வாழ்க்கை மட்டமாக இருந்தால், அது வருந்தத் தக்கதே. வாழும் முறை தூய்மையானதாகவும், ப்ரேமை கொண்டதாகவும், பணிவு, பாவத்தைக் கண்டு அச்சம், பெரியவர்கள் மீது மரியாதை ஆகியவையால் நிரம்பியதாகவும் இருக்குமானால், வாழ்க்கைத் தரம் ஏழ்மையாக இருந்தால் கூட பரவாயில்லை. வேதங்கள் மறுபடியும் கற்கப்பட்டு, கடைப்பிடிக்கப் படுமானால், இந்த வாழ்க்கை முறையை மீண்டும் நிலைநாட்டுவது எளிதானதே. வேதமாதா (வேதங்கள் எனும் தாய்) உங்களை ப்ரேமை மற்றும் கனிவுடன் பேணிடுவாள். நம்பிக்கையுடன் இருங்கள்; ஒரு கண்ணாடித் துண்டு எனக் கருதி ஒரு வைரத்தை உதாசீனப்படுத்தி விடாதீர்கள். வேதங்கள் பரிந்துரைக்கும் தர்மமே, துக்கத்திலிருந்து உங்களைக் காக்க வல்ல மிகச் சிறந்த கவசமாகும்.
எப்படி ஒரு பரிபூரணமான உணவு, உடலுக்கு ஆரோக்கியத்தையும், வலிமையையும் அளிக்கிறதோ, அவ்வாறே, பிரார்த்தனை மனதைப் பரிசுத்தப் படுத்தி, ஆத்மாவை வலுப்படுத்துகிறது - பாபா