azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 24 Sep 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 24 Sep 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
The cow transforms grass and gruel into sweet strength-giving milk and gives it away in plenty to its master. Develop that quality, that power to transform the food you consume into sweet thoughts, words and deeds of sympathy for all. The child Krishna wept for permission to go along with the cows to the fields of pasture. Yashodha said, "Dear child! Your tiny silken soles cannot walk along those thorny, pebble-filled tracks. I shall get nice little sandals for you. You can go, after the sandals are ready." But Krishna sweetly replied, "The cows whom we serve are not shod. Why should we, who are their servants, avoid the thorns and stones which they cannot avoid?" No wonder the cows and calves of Gokul were immobilised and wept, when Krishna left for Mathura! When you have filled your heart with sympathy for the distressed, the Lord will shower His Grace. (Divine Discourse, Jan 11, 1968)
GREATER THAN ALL OTHER FORMS OF WORSHIP IS SERVICE TO ONE’S FELLOWMEN
DONE IN AN UNSELFISH AND DEDICATED SPIRIT. - BABA
பசு, புல்லையும், கழிநீரையும், பலம் தரும் இனிமையான பாலாக மாற்றுவதோடு, அபரிமிதமாக அதை தனது ஏஜமானருக்கு அளிக்கிறது. நீங்கள் உண்ணும் உணவை, அனைவருக்கும், இனிமையான சிந்தனைகள், சொற்கள் மற்றும் பரிவான செயல்களாக மாற்றக் கூடிய அந்த சக்தியை, அத்தகைய குணத்தை அபிவிருத்தி செய்து கொள்ளுங்கள். குழந்தையான ஸ்ரீகிருஷ்ணர், பசுக்களுடன் அவைகள் மேயும் வயல்களுக்குச் செல்ல அனுமதி கேட்டு அழுதார். யசோதா, ‘’ அன்பான குழந்தையே! உன்னுடைய பட்டு போன்ற மிருதுவான பாதங்கள் அந்த முள்ளும், கல்லும் நிறைந்த பாதையில் நடக்க முடியாதவை. உனக்கு அருமையான சின்ன செருப்புகளைக் கொண்டு வருகிறேன். அந்தச் செருப்புகள் தயாரானவுடன் நீ போகலாம் ‘’ என்று கூறினாள். ஆனால், ஸ்ரீகிருஷ்ணர், இனிமையாக, ‘’ நாம் சேவை செய்யும் பசுக்களுக்கு லாடம் அடிக்கவில்லை. அவைகள் தவிர்க்க முடியாத முட்களையும், கற்களையும், அவைகளது சேவகர்களான நாம் ஏன் தவிர்க்க வேண்டும்?’’ என பதிலளித்தார். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் மதுராவிற்குப் புறப்பட்டுச் சென்ற போது, கோகுலத்தின் பசுக்களும், கன்றுக் குட்டிகளும், ஸ்தம்பித்து அழுதன என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை! எப்போது துன்பப்படுவோர்களுக்கான அனுதாபத்தால் நீங்கள் உங்கள் இதயத்தை நிரப்புகிறீர்களோ, அப்போது, இறைவன் அவனது அருளைப் பொழிவான்.
ஒரு தன்னலமற்ற மற்றும் அர்ப்பணிப்பு உணர்வோடு ஒருவர் தனது சக மனிதர்களுக்கு ஆற்றும் சேவை, அனைத்து விதமான இறை வழிபாடுகளையும் விட அதிக மேன்மையானதாகும்- பாபா