azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 23 Sep 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 23 Sep 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Man walks with two legs: iha and para (this world and the other), dharma and Brahaman, righteousness and God! If he is totally engrossed in this world, he is choosing to travel all his life with a handicap; hopping on one leg. That is fraught with trouble; he may fall any moment and break his shin. And he does! Goodness in this world, Godliness for the life after death - equal attention to both and vigilance while taking a step with either foot - these are essential for a happy journey through life. You have to put the right foot, the Brahman step, when you enter the region of realisation. The senses have to be conquered by then. 'Go' means 'senses' and 'Gopi' means a person who has subdued the senses, as a result of surrender to Gopala, the master of the Go (senses). Krishna once told Arjuna that he can enter Vrajamandala (the region where the Gopas and Gopis lived), only after mastering his emotions and impulses and his tendency to yield to the senses. (Divine Discourse, Jan 13, 1968)
WHATEVER WORK YOU DO, DO IT IN THE NAME OF GOD AND MAKE YOUR LIFE SACRED.
YOU SHOULD NOT THINK THAT WORLDLY LIFE AND SPIRITUAL LIFE ARE DIFFERENT. - BABA
மனிதன், இகம்- பரம், தர்மம்- இறைவன் என்ற இரண்டு கால்களில் நடக்கிறான்! ஒருவன் உலகியலானவற்றிலேயே முழுமையாக ஆழ்ந்திருந்தால்,அந்த மனிதன் தனது வாழ்க்கை முழுவதும், ஊனமுற்றவனாக, ஒற்றைக் காலிலேயே நடப்பதைத் தேர்ந்தெடுத்தது போலாகும். அது துன்பம் நிறைந்ததாகும்;எந்த நேரத்திலும், அவன் கீழே விழுந்து, தொடை உடைய நேரிடலாம். ஒருவர் அப்படித் தான் செய்கிறார் ! இகத்தில் நல்லவை, இறப்பிற்குப் பின் இறைத்தன்மை என இரண்டிலும் சமமான கவனம், எந்தக் காலாக இருந்தாலும், அடி எடுத்து வைக்கும் போது ஜாக்கிரதை- இந்த இரண்டுமே ஒரு இனிமையான வாழ்க்கைப் பயணத்திற்கு அத்தியாவசியமே. ஆத்ம சாக்ஷாத்காரம் எனும் நிலைக்கு நுழையும் போது, நீங்கள் வலது காலை , அதாவது பரப்ரம்மத்தின் காலை எடுத்து வைக்க வேண்டும். அதற்குள் புலன்களை வென்றாக வேண்டும். கோ என்றால் புலன்கள், கோபி என்றால் புலன்களை, அவற்றின் எஜமானரான கோபாலனிடம் சரணாகதி அடைந்ததன் விளைவாக, அடக்கியவர் என்று பொருளாகும். ஒரு முறை பகவான் ஸ்ரீகிருஷ்ணர், அர்ஜூனனிடம், அவன், தனது உணர்வுகள் மற்றும் உந்துதல்களையும், புலன்களிடம் பணிந்து விடும் அவனது மனப்பாங்கையும் வென்ற பின்னரே, கோபர்கள் மற்றும் கோபிகைகள் வாசம் செய்யும் வ்ரஜ மண்டலத்தில் நுழைய முடியும் எனக் கூறினார்.
நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும், அதை இறைவன் பெயரால் செய்து, உங்கள் வாழ்க்கையைப் புனிதமாக்கிக் கொள்ளுங்கள். உலகியலான வாழ்க்கையும், ஆன்மீக வாழ்க்கையும் வெவ்வேறானவை என எண்ணாதீர்கள்- பாபா