azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 16 Sep 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 16 Sep 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Because of the many obstacles and troubles that came to Prahlada, and because of the punishments that were given to him, it was possible for the rest of the world to know how great his devotion was. He never had tears in his eyes and he never exhibited any pain when the demons were harming him. He was only uttering the name of the Lord and was asking the Lord to come to him. Because of such a situation, he was able to promote devotion and show others what real faith and devotion can do. On the other hand, had Prahlada been looked after by his father with care and tenderness and if he took him in his lap, how would Prahlada’s devotion and faith be known to the rest of the world? Even a diamond does not get its value unless we cut the facets on it. Even pure gold will not be turned into a beautiful ornament unless it is repeatedly beaten hard and put into fire. In all pains and troubles, we should recognise only paths for getting ultimate happiness. (Summer Roses on the Blue Mountains, 1976, Ch 3)
NEVER FEEL DEPRESSED WHEN YOU ARE WEIGHED DOWN BY DIFFICULTIES.
GOD WILL NEVER IMPOSE ON YOU THE ORDEALS WHICH YOU CANNOT BEAR. - BABA
பக்த பிரஹலாதனுக்கு வந்த தடைகள் மற்றும் துன்பங்களினாலும்,அவனுக்குக் கொடுக்கப் பட்ட தண்டனைகளினாலும், உலகில் உள்ள மற்றவர்கள் அவனது பக்தி எவ்வளவு மகத்தானது என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. அரக்கர்கள் அவனைத் துன்புறுத்தியபோது, அவனது கண்களில் ஒருபோதும் கண்ணீர் வரவும் இல்லை, அவன் ஒருபோதும் எந்த விதமான வலியையும் காட்டிக் கொள்ளவில்லை. அவன் இறைவனது திருநாமத்தை மட்டுமே உச்சரித்துக் கொண்டு, இறைவனைத் தன்னிடம் வரவேண்டும் என்று வேண்டிக் கொண்டு இருந்தான். அத்தகைய சூழ்நிலை காரணமாக, அவன் பக்தியை ஊக்குவிக்கவும், உண்மையான நம்பிக்கையும் பக்தியும் என்ன செய்ய முடியும் என்பதை மற்றவர்களுக்குக் காட்டவும் முடிந்தது,மாறாக, பிரஹலாதனை அவனது தந்தை பரிவோடும்,கனிவோடும் பராமரித்து, அவனைத் தனது மடியில் வைத்துக் கொண்டு இருந்திருப்பாரேயானால், பிரஹலாதனின் பக்தியும், நம்பிக்கையும் உலகில் உள்ள மற்றவர்களுக்கு எப்படித் தெரிந்திருக்க முடியும்? ஒரு வைரத்திற்குக் கூட, அதன் பக்கங்களை நாம் அறுக்காவிட்டால், மதிப்பு கிடைப்பதில்லை. சொக்கத் தங்கம் கூட, அதைத் திரும்பத் திரும்ப கடினமாகத் தட்டி, உலையில் இடப்படாமல், ஒரு அழகான ஆபரணமாக ஆவதில்லை. அனைத்து வலிகள் மற்றும் துன்பங்களிலும், இறுதியான சந்தோஷத்தைப் பெறுவதற்கான பாதை மட்டுமே உள்ளதை நாம் உணர வேண்டும்.
துன்பங்களினால் நீங்கள் பாதிக்கப் படும்போது,ஒருபோதும் மனச்சோர்வு அடையாதீர்கள். உங்களால் தாங்க முடியாத எந்தக் கஷ்டத்தையும், இறைவன் ஒருபோதும் உங்கள் மீது சுமத்துவதில்லை- பாபா