azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 12 Sep 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 12 Sep 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Imagine you are visiting a friend in a city and planning to stay with him for ten days. You have some money with you, and you are afraid to carry it about with you. Now, if you have handed over the purse to your friend for safe-keeping, you can happily go round, to all the places in the city and suburbs you long to visit. You can roam through the busiest market, with no trace of fear. The purse you have is Love; give it all to God. He will liberate you from worry, anxiety and fear. Through japa, dhyana and seva sadhana (contemplation, meditation and service), you have to cultivate Love towards God. Take Dhruva, for example. He prayed and practised austerities in order to induce God to grant him the rulership of the Kingdom. But when God appeared as Vishnu before him, he said, "Lord! I do not desire the Kingdom. I want You and You only." Similarly in the preliminary stages, one prays for worldly boons and material gain, but as thoughts get clarified and purified, one desires just one boon from the Lord - He Himself! (Divine Discourse, Dec 25, 1981)
A HEART FILLED WITH LOVE OF THE DIVINE WILL ENJOY PEACE AND BE TOTALLY FREE FROM FEAR. - BABA
நீங்கள் ஒரு நகரத்தில் ஒரு நண்பரைக் காணச் சென்று, அவருடன் பத்து நாட்கள் தங்கி இருக்கத் திட்டமிட்டு இருக்கிறீர்கள் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்களிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது; அதை உங்களுடனேயே எடுத்துக் கொண்டு செல்வதற்கு உங்களுக்குப் பயமாக இருக்கிறது. இப்போது, நீங்கள் உங்கள் பணப்பையை உங்களது நண்பரிடம் பத்திரமாக வைத்துக் கொள்வதற்காகக் கொடுத்து வைத்து விட்டீர்கள் என்றால், நகரத்திலும், அதைச் சுற்றியும் உள்ள, நீங்கள் பார்க்க ஏங்கிய எல்லா இடங்களுக்கும் சந்தோஷமாகச் சென்று வரலாம். மிகவும் ஆராவாரமாக உள்ள சந்தையிலும், எந்த விதமான பயமும் இன்றி, நீங்கள் திரிந்து வரலாம். உங்களிடம் உள்ள பணப்பை ப்ரேமையே; அது அனைத்தையும் இறைவனிடம் கொடுத்து விடுங்கள். அவன் உங்களுக்கு கவலை, கலக்கம் மற்றும் பயத்திலிருந்து விடுதலை அளித்து விடுவான். ஜபம், தியானம் மற்றும் சேவை சாதனா மூலம், நீங்கள் இறைவன் பால் ப்ரேமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக, துருவனை எடுத்துக் கொள்ளுங்கள். அவன் இறைவன் தனக்கு அரசாட்சியைப் பெற்றுத் தர வேண்டும் என்பதற்காக பிரார்த்தித்து, கடும் தவங்களைச் செய்தான். ஆனால் இறைவன் அவன் முன் மஹாவிஷ்ணுவாகத் தோன்றிய போது,’’ பகவானே! எனக்கு ராஜ்யம் வேண்டாம். எனக்கு நீங்கள் மட்டுமே வேண்டும் ‘’ என்றான். அதைப் போலவே, ஆரம்ப காலத்தில் ஒருவர் உலகியலான வரங்கள் மற்றும் பொருட்களின் லாபத்திற்காக பிரார்த்திப்பார்; ஆனால், சிந்தனைகள் தெளிவாகி, பரிசுத்தம் அடையும் போது, ஒருவர் இறைவனிடமிருந்து ஒரே ஒரு வரத்தையே- அதாவது இறைவனையே வேண்டுவர்.
இறை அன்பில் தோய்ந்த ஒரு இதயம் சாந்தியை அனுபவித்து,
அச்சத்திலிருந்து முழுமையாக விடுபட்டு இருக்கும்- பாபா