azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 10 Sep 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 10 Sep 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

The Upanishads announce certain remedial sadhanas to get rid of constant inner dialogue (manasika-sambhashana), which is an obstacle to inner peace. The first is the regulation of breath (pranayama). This is no gymnastics, nor a formidable exercise. The mind has to concentrate on the period of retention (kumbhaka), on the process of inhaling (puraka) and exhaling (rechaka). When attention is fixed thus, the inner talk on other irrelevant matters will end. And mental strength is acquired. The second sadhana is: immersal in beneficial activity — that is to say, service to people that will help diminish the ego sense, and acts that are good and godly. When one’s thoughts are engaged in such activities, the mind turns away from the talk it indulges in. Again, the sadhanas of listening to spiritual advice, reflection on them and discovering ways and means of confirming faith in the Spirit (sravana-manana-nididhyasana), also of recital of the names of God and withdrawing the mind from sensual pursuits (Japa and tapa), have been prescribed more for the silencing of this mental chatter. (Vidya Vahini, Ch 18)
A MIND TURNED INWARD TOWARD AN INNER VISION OF GOD AND SPEECH TURNED TOWARD OUTER VISION OF THE LORD — BOTH WILL PROMOTE SPIRITUAL STRENGTH AND SUCCESS. - BABA
அகச் சாந்திக்கு ஒரு தடையாக இருக்கும், இடையறாத உள் உரையாடலில் (மானஸிக -சம்பாஷணா) இருந்து விடுபட, உபநிஷதங்கள் சில குணப்படுத்தும் சாதனைகளை அறிவித்துள்ளன.முதலாவது சுவாசத்தைக் கட்டுப்படுத்துவது ( ப்ராணாயாமா). இது கழைக்கூத்தாடி வேலையோ அல்லது ஒரு அச்சுறுத்தும் உடற்பயிற்சியோ இல்லை. மூச்சை நிறுத்துவதின் (கும்பகா) நேரம், மூச்சை உள் இழுப்பது (பூரகா) மற்றும் மூச்சை வெளி விடுவது (பூரகா) என்ற முறை ஆகியவற்றின் மீது மனதைக் குவிக்க வேண்டும். எப்போது கவனம் இவ்வாறு நிலை நிறுத்தப் படுகிறதோ,வேறு அர்த்தமற்ற விஷயங்களின் மீதான உள் உரையாடல் நின்று விடும். மேலும் மனவலிமை பெறப்படுகிறது. இரண்டாவது சாதனை; பயனுள்ள பணிகளில், அதாவது அகந்தை உணர்வைக் குறைப்பதற்கு உதவும் மனித சேவை மற்றும் நல்ல மற்றும் தெய்வீகமான பணிகளில் ஆழ்ந்து விடுவது. எப்போது ஒருவரது சிந்தனைகள் இப்படிப் பட்ட செயல்களில் ஈடுபடுகிறதோ, மனம் அது ஈடுபடும் உரையாடல்களில் இருந்து விலகி விடும். மேலும், ஆன்மிக அறிவுரையைக் கேட்பது, அவற்றைப் பற்றிச் சிந்திப்பது மற்றும் ஆத்மாவின் மீதான நம்பிக்கையை உறுதி செய்யும் வழிகளையும் , முறைகளையும் கண்டு பிடிப்பது (ஸ்ரவணம்- மனனம்- நிதித்யாஸனம்), இறைவனது திருநாமஸ்மரணை மற்றும் மனதை புலன்களின் தேடுதல்களில் இருந்து விலக்கிக் கொள்வதற்கான முறை (ஜபம்- தியானம்),ஆகியவையும் இந்த மன உரையாடலை மேலும் அமைதிப் படுத்துவதற்காகவே பரிந்துரைக்கப் பட்டுள்ளன.
இறைவனின் ஒரு அக தரிசனத்திற்காக உள்நோக்கித் திருப்பப்பட்ட ஒரு மனம், இறைவனின் புற தரிசனத்திற்காக வெளிநோக்கித் திருப்பப்பட்ட பேச்சு - இரண்டுமே ஆன்மிக வலிமையையும்,, வெற்றியையும் ஊக்குவிக்கும்- பாபா