azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 09 Sep 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 09 Sep 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
What exactly is the meaning of “Sai Baba”? Sai means Sahasrapadma (thousand lotuses), sakshatkara (realisation, direct experience of the Lord), etc., Ayi means mother, and Baba means father. Thus, “Sai Baba” means ‘He who is both Father and Mother and the Goal of all yogic endeavour’ — the ever-merciful Mother, the All-wise Father, and the Goal of spiritual efforts. When you are groping in a dark room, you must seize the chance when someone brings a lamp into the room. Hurriedly collect your belongings scattered there, or discover where they are located, or do whatever else you need. Similarly, make the best of this chance when the Lord has come in human form to your very door and get ready to save yourself from disaster. (Divine Discourse, Feb 26, 1961)
ONCE YOU HAVE TAKEN REFUGE IN GOD, NEVER LOSE FAITH, COME WHAT MAY.
DO NOT BECOME DISHEARTENED BY TRIALS AND TRIBULATIONS THAT COME YOUR WAY. - BABA
" சாய் பாபா " என்பதன் சரியான பொருள் என்ன? "சாய்" என்றால்,சஹஸ்ர பத்ம (ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை), அதாவது , ஆத்ம சாக்ஷாத்காரம், (தன்னை உணர்தல் அல்லது இறைவனை நேரடியாக உணர்தல்) என்று பொருள்; "ஆயி" என்றால் தாய் , ,பாபா என்றால் தந்தை . அதாவது, "சாய் பாபா" என்றால் தந்தையும், தாயும் ஆகி, அனைத்து யோகங்களின் இலட்சியமும் அவரே அல்லது கருணை கொண்ட தாய் ,அனைத்தும் உணர்ந்த தந்தை, அனைத்து ஆன்மீக சாதனைகளின் குறிக்கோளும் அவரே என்று பொருள். நீங்கள் ஒரு இருட்டு அறையில் தடுமாறிக் கொண்டு இருக்கும் போது , யாராவது ஒருவர் ஒரு விளக்கை அறைக்குள் கொண்டு வந்தால் ,நீங்கள் அந்த வாய்ப்பை உடனே பயன் படுத்திக் கொள்ள வேண்டும். வேகமாக அங்கே சிதறிக் கிடைக்கும் உங்களது பொருட்களை பொறுக்கி எடுத்துக் கொள்ளவோ, அல்லது, அவை எங்கு இருக்கின்றன எனத் தெரிந்து கொள்ளவோ அல்லது, அந்த விளக்கு வெளிச்சத்தில் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யவோ வேண்டும். அதைப் போலவே, இறைவன் மனிதனாக அவதாரம் எடுத்து உங்கள் வீட்டு வாசலுக்கே இற(ர)ங்கி வந்திருக்கும்போது, அந்த வாய்ப்பை நன்றாகப் பயன் படுத்திக் கொண்டு, பேரழிவில் இருந்து உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ளத் தயாராக இருங்கள்.
நீங்கள் கடவுளிடம் தஞ்சம் அடைந்தவுடன், என்ன வந்தாலும் ஒருபோதும் நம்பிக்கையை இழக்காதீர்கள்; உங்கள் வழியில் வரும் சோதனைகள் மற்றும் இன்னல்களால் சோர்வடைய வேண்டாம். - பாபா