azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 05 Sep 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 05 Sep 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
The teacher is like a water storage tank. If there is clean and good water in the tank, you will get good water in the taps. Students are like the taps and will prove to be good only when the teachers are good. Teachers should have lofty ideals so that these can be reflected in their students, who are the future citizens and leaders. Teachers should first practise themselves what they want to teach to the students. They should have a feeling of sacrifice for the sake of the well-being of the nation so that the students will have a similar ideal. Before they try to correct the students, they should first correct themselves. Human values are not commodities sold in the market. They should be reflected in one's behaviour and one's way of life. They should be taught not as academic subjects but as the basis on which right living should be built up. The teacher should do Sadhana to ensure control of senses and achieve harmony in thought, word and deed. When you achieve this harmony, you will become an ideal teacher. (Divine Discourse. Jan 20, 1985)
TEACHERS MUST REVEAL THE DIRECTION AND THE GOAL.
STUDENTS SHOULD LAY THE ROAD AND JOURNEY INTO THE FUTURE. - BABA
ஆசிரியர் ஒரு நீர்நிலைத் தொட்டியில் உள்ள தண்ணீரைப் போன்றவர். சுத்தமான மற்றும் நல்ல தண்ணீர் தொட்டியில் இருக்குமானால், குழாய்களிலும் நீங்கள் நல்ல தண்ணீரைப் பெறுவீர்கள்.மாணவர்கள் குழாய்களைப் போன்றவர்கள்; ஆசிரியர்கள் நல்லவர்களாக இருந்தால் மட்டும் தான் அவர்களும் நல்லவர்களாக இருப்பார்கள்.எதிர்கால குடிமகன்களாகவும், தலைவர்களாகவும் ஆகப் போகும் அவர்களது மாணவர்களில் பிரதிபலிக்கும் வண்ணம் ஆசிரியர் உயர்ந்த இலட்சியங்களைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் மாணவர்களுக்கு எதைக் கற்பிக்க வேண்டும் என விரும்புகிறார்களோ, அதை ஆசிரியர்கள் முதலில் தாங்களே கடைப்பிடிக்க வேண்டும். மாணவர்களும் அதைப் போன்ற ஒரு இலட்சியம் கொண்டவர்களாக இருப்பதற்கு ஏற்ப, அவர்கள் நாட்டின் நலனுக்காக ஒரு தியாக உணர்வு கொண்டவர்களாக இருக்க வேண்டும். மாணவர்களைத் திருத்துவதற்கு முன், அவர்கள் தங்களைத் தாங்களே திருத்திக் கொள்ள வேண்டும்.மனிதப் பண்புகள் சந்தையில் விற்கப் படும் பொருட்கள் அல்ல. அவை ஒருவரது நடத்தையிலும், வாழ்க்கை முறையிலும் பிரதிபலிக்க வேண்டும். அவை கல்விப் பாடங்களாக அல்ல, சரியான வாழ்க்கை கட்டமைக்கப்பட வேண்டிய அடிப்படையாக கற்பிக்கப்பட வேண்டும். ஆசிரியர் புலனடக்கம் மற்றும் சிந்தனை, சொல் மற்றும் செயலின் இசைவை உறதி செய்வதற்கான சாதனையைச் செய்ய வேண்டும். நீங்கள் இந்த இசைவைப் பெறும்போது, ஒரு இலட்சிய ஆசிரியராக ஆகி விடுவீர்கள்.
ஆசிரியர்கள் செல்ல வேண்டிய திசையையும், அடைய வேண்டிய இலக்கையும் எடுத்துக் காட்ட வேண்டும். மாணவர்கள் பாதையை அமைத்து, எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும் - பாபா