azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 30 Aug 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 30 Aug 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
The unceasing toil of each succeeding day has as its aim and justification this consummation: to make one’s last days sweet and pleasant. But each day also has its evening. If the day is spent in good deeds, then the evening blesses us with deep, invigorating and refreshing sleep, the sleep about which it is said that it is akin to samadhi. One has only a short span of life on earth. But even in this short life one can attain divine bliss by wisely and carefully using the time. Two people, in appearance the same, ostensibly of the same mould, grow under the same conditions, but one turns out to be an angel while the other stays on with their animal nature. What’s the reason for this differential development? Habits, behaviour formed out of these habits, and the character into which that behaviour has solidified. People are creatures of character. (Prema Vahini, Ch 5)
FIRST WEED OUT THE EVIL THOUGHTS AND BAD HABITS. SECOND, CULTIVATE GOOD HABITS. - BABA
ஒருவரின் இறுதி நாட்களை இனிமையாகவும் இதமானதாகவும் ஆக்குவது என்ற இந்த நிறைவையே, அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு நாளின் இடையறாத உழைப்பு தனது குறிக்கோளாகவும், அதன் நியாயப்படுத்துதலாகவும் கொண்டுள்ளது. ஆனால் ஒவ்வொரு நாளுக்கும் மாலை நேரம் என்று ஒன்று உண்டு. நாள் நற்கருமங்களை ஆற்றுவதில் செலவிடப்படுமானால், மாலை நேரம், சமாதி நிலையை ஒத்தது என்று கூறப்படும், ஆழ்ந்த,ஆற்றல் அளிக்கும், புத்துணர்ச்சியூட்டும் தூக்கத்தை அளிக்கும். ஒருவருக்கு பூமியில் ஒரு குறுகிய ஆயுட்காலம் மட்டுமே உள்ளது. ஆனால், இந்த குறுகிய கால வாழ்க்கையில் கூட ஒருவர் காலத்தை கவனமாகவும், புத்திசாலித்தனமாகவும் பயன்படுத்துவதன் மூலம் தெய்வீக ஆனந்தத்தை அடைய முடியும். இரண்டு மனிதர்கள், தோற்றத்தில் ஒரே மாதிரியாகவும், ஒரே அச்சில் வார்த்தவர்கள் போல இருந்தாலும், ஒரே மாதிரியான சூழ்நிலையில் வளர்ந்திருந்தாலும், ஒருவர் தேவதை போல ஆகிறார்; அதே சமயம் மற்றொருவர் அவர்களது மிருக இயல்புகளுடனேயே இருக்கிறார். இப்படி மாறுபட்ட வளர்ச்சிக்குக் காரணம் என்ன? பழக்கங்கள், இந்தப் பழக்கங்களிலிருந்து உருவாகிய நடத்தை மேலும் இந்த நடத்தை வடிவாக அமைந்து விட்ட குணநலன். மனிதர்கள் குணநலனின் படைப்புக்களே.
முதலில் தீய சிந்தனைகளையும், கெட்ட பழக்கங்களையும் களைந்தெறியுங்கள். இரண்டாவதாக, நல்ல பழக்கங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்- பாபா