azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 21 Aug 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 21 Aug 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Vinayaka is also called Ganapati. This term means that He is the Lord of the ganas (a class of divine entities). This term also means that He is the master of the intellect and discriminating power in man. He possesses great intelligence and knowledge. Such knowledge issues from a pure and sacred mind. This knowledge leads to Vijnana (wisdom). He is described as the Lord of Buddhi (intelligence) and Siddhi (wisdom or realisation). Buddhi and Siddhi are referred to as the consorts of Vinayaka. The mouse is the vehicle of Vinayaka. It is a symbol of the attachment to worldly tendencies. It is well known that if you want to catch a mouse you place a strong-smelling edible inside the mouse-trap. The mouse can see well in the dark. As Vinayaka's vehicle, the mouse signifies an object that leads man from darkness to light. The Vinayaka Principle, thus, removes all the bad qualities, bad practices and bad thoughts in men, and inculcates in them good qualities, good conduct and good thoughts. (Divine Discourse, Sep 12, 1991)
EVERYONE SHOULD CULTIVATE A SPIRIT OF SACRIFICE
THAT GROWS WITH YOU, AS YOU GROW OLDER. - BABA
விநாயகர் கணபதி என்றும் அழைக்கப் படுகிறார். கணங்களுக்கு எல்லாம் அதிபதி என்பது இந்தச் சொல்லின் பொருளாகும். அவரே புத்தி மற்றும் மனிதனில் உள்ள பகுத்தறியும் சக்தியின் அதிபதியும் என்பதும் கூட அதன் பொருளாகும்.அவர் தலை சிறந்த புத்தியும், அறிவும் கொண்டவர்.இப்படிப் பட்ட அறிவு ஒரு பரிசுத்தமான மற்றும் புனிதமான மனதிலிருந்தே வருகிறது. இந்த அறிவு ஞானத்திற்கு இட்டுச் செல்கிறது. அவர், புத்தி மற்றும் சித்தியின் இறைவன் என்றும் வர்ணிக்கப் படுகிறார். புத்தி மற்றும் சித்தி விநாயகரின் துணைவியர்கள் எனக் குறிப்பிடப் படுகிறார்கள். மூஞ்சூறே விநாயகரின் வாகனமாகும். உலகியலான மனப்பாங்குகளில் கொள்ளும் பற்றுதலின் ஒரு சின்னமே அது. ஒரு எலியைப் பிடிக்க வேண்டும் என்றால், நல்ல வாசனை உள்ள தின்பண்டத்தை எலிப் பொறியில் வைக்க வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. எலி இருட்டிலும் நன்றாகப் பார்க்க வல்லது. விநாயகரின் வாகனமான எலி, மனிதனை இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு இட்டுச் செல்லும் ஒரு பொருளைக் குறிக்கிறது. இவ்வாறு, விநாயக தத்துவம், மனிதனுள் உள்ள அனைத்து தீய குணங்கள், தீய பழக்கங்கள் மற்றும் தீய எண்ணங்களை நீக்கி, அவர்களுள் நல்ல குணங்கள், நன்னடத்தை மற்றும் நற்சிந்தனைகளை உருவாக்குகிறது.
வயது ஏற ஏற, உங்களுடனேயே கூட வளரும், ஒரு தியாக உணர்வினை ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும்- பாபா