azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 20 Aug 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 20 Aug 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
From today harness the enthusiasm of youth for carrying to every street and alley, the glory of the Lord's name! The entire atmosphere is surcharged with electro-magnetic waves. Because of the pollution of these waves, the hearts of human beings also get polluted. To purify this atmosphere, you have to chant the Lord's name and sanctify the radio waves. There is pollution in the air we breathe, the water we drink and the food we consume. Our entire life has been polluted. All this has to be purified by suffusing the atmosphere with the Divine name. People admire the beauty of Nature, but are not aware of the beauty in their hearts. Make your heart beautiful by adorning it with the sacred love of God. Chant the name with joy in your hearts. (Divine Discourse, Jan 14, 1995)
EMBODIMENTS OF LOVE! NO AMOUNT OF SCHOLARSHIP WILL GIVE YOU PEACE,
UNLESS YOU ARE FILLED WITH THE LOVE OF GOD! - BABA
இறைவனது திருநாம மகிமையை ஒவ்வொரு தெரு மற்றும் சந்திற்கும் எடுத்துச் செல்வதில் இளைஞர்களுக்கு உள்ள உற்சாகத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்! சுற்றுப்புறம் அனைத்தும் மின் காந்த அலைகளால் நிரம்பி உள்ளது. இந்த அலைகள் மாசடைந்திருப்பதன் காரணமாக, மனிதர்களின் இதயங்களும் மாசடைந்துள்ளன. இந்தச் சூழ்நிலையைத் தூய்மைப்படுத்த, நீங்கள் இறைவனது நாமத்தை உச்சரித்து, ரேடியோ அலைகளைப் புனிதமாக்க வேண்டும். நாம் சுவாசிக்கும் காற்றில், நாம் பருகும் நீரில், நாம் உண்ணும் உணவில் மாசு உள்ளது. நமது வாழ்க்கை அனைத்தும் மாசடைந்துள்ளது. இவை அனைத்தையும் இறைவனது திருநாமத்தில் தோய்த்துத் தூய்மைப்படுத்த வேண்டும். மக்கள் இயற்கையின் அழகைப் பாராட்டுகிறார்கள், ஆனால் அவர்களின் இதயங்களில் உள்ள அழகைப் பற்றி அறிந்திருக்கவில்லை. இறைவன் பால் கொள்ளும் புனித ப்ரேமையால் அலங்கரித்து, உங்கள் இதயத்தை அழகுபடுத்துங்கள். உங்கள் இதயங்களில் ஆனந்தத்துடன் இறைவனது திருநாமத்தை உச்சரியுங்கள்.
ப்ரேமையின் திருவுருவங்களே! நீங்கள் இறைவன் பால் கொள்ளும் ப்ரேமையால் நிரம்பி இருக்கவில்லை என்றால்.எந்த அளவு பாண்டித்யம் இருந்தாலும், அது உங்களுக்கு சாந்தி தராது- பாபா