azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 18 Aug 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 18 Aug 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Four patients visited a doctor. The doctor examined the first patient and tells him: "There is nothing wrong with you. You will feel better with hot water fermentation for your stomach!" To the second, he gives a medicine to cure his gas trouble. To the third, he prescribes a purgative. After examining the fourth man, the doctor declares that he must undergo an operation immediately. Does the doctor bear any ill will towards him? Not at all. His ailment is different. He suffers from appendicitis, which calls for immediate operation. Likewise, judging from the thoughts and behaviour of different persons, I mete out different types of treatment appropriate for each of them. I do not look at some people. I do not talk to some others. I turn away from some others. All these are different types of prescriptions. Once you realise that your behaviour is responsible for Swami's attitude, you will correct yourself and behave properly in the future. (Divine Discourse, May 31, 1990)
EVERY EXPERIENCE IS A LESSON, EVERY LOSS IS A GAIN. - BABA
நான்கு நோயாளிகள் ஒரு வைத்தியரிடம் சென்றார்கள்.வைத்தியர் முதல் நோயாளியைப் பரிசோதனை செய்து விட்டு,, அவரிடம்,’’ உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. உங்கள் வயிற்றிற்கு வெந்நீர் ஒத்தடம் கொடுத்தால், நீங்கள் நல்லபடியாக உணர்வீர்கள்’’ என்கிறார்.இரண்டாமவருக்கு, அவரது வாயுத் தொந்தரவைக் குணமாக்க ஒரு மருந்தை அளிக்கிறார். மூன்றாமவருக்கு ஒரு பேதி மருந்தை பரிந்துரைக்கிறார். நான்காவது மனிதரைப் பரிசோதனை செய்து விட்டு, அவர் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கிறார்.வைத்தியருக்கு அவர் மீது ஏதாவது கெட்ட எண்ணமா? இல்லவே இல்லை. அவரது வியாதி வேறானது. உடனே அறுவை சிகிச்சை தேவைப்படும் அப்பன்டிசைட்டிஸ் என்ற நோயால் அவர் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அதைப் போலவே, வெவ்வேறு மனிதர்களின் சிந்தனைகள் மற்றும் நடத்தைகளைச் சீர்தூக்கிப் பார்த்து,அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஏற்ற சிகிச்சையை நான் அளிக்கிறேன். நான் சில மனிதர்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. நான் சில மனிதர்களிடமிருந்து திரும்பிச் சென்று விடுகிறேன். இவை அனைத்தும் வெவ்வேறு விதமான மருந்துகள். சுவாமி அவ்வாறு நடந்து கொள்வதற்கு உங்கள் நடத்தையே காரணம் என்று நீங்கள் ஒருமுறை உணர்ந்து கொண்டு விட்டால், நீங்கள் உங்களையே திருத்திக் கொண்டு, பிற்காலத்தில் முறையாக நடந்து கொள்வீர்கள்.
ஒவ்வொரு அனுபவமும் ஒரு பாடமே, ஒவ்வொரு நஷ்டமும் ஒரு லாபமே- பாபா