azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 16 Aug 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 16 Aug 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
The air you breathe, the water you drink, the earth on which you walk are all gifts of God. How grateful are you to the sun, who provides light, which cannot be equalled by all the electric bulbs in the world? Can all the pumpsets in the world provide as much water as is offered in a single downpour of rain? Can all the fans in the world provide as much breeze as you get when the wind blows? Without being grateful for Divine gifts, many of you go after the trivial and waste precious life. The ancient great sages considered devotion as their means of expressing gratitude to Providence. The first quality that all of us must cultivate is gratitude to the Divine. People are thankful for even small acts of service done to them. Is it not necessary to be grateful to the Divine who has provided us with so many essential benefits through Nature and the five elements? (Divine Discourse, Jan 14, 1989)
DEVELOP PURE AND SINCERE DEVOTION AND SANCTIFY YOUR LIVES. WITHOUT LOVE, RIGHTEOUSNESS WILL BE A MECHANICAL RITUAL! - BABA
நீங்கள் சுவாசிக்கும் காற்று, பருகும் நீர், நீங்கள் நடக்கும் பூமி ஆகிய அனைத்தும் இறைவன் தந்த பரிசுகளே. உலகிலுள்ள அனைத்து மின்சார விளக்குகளும் சேர்ந்து ஈடு கொடுக்க முடியாத அளவு ஒளியை அளிக்கும் சூரியனுக்கு நீங்கள் எவ்வாறு நன்றி உள்ளவர்களாக இருக்கிறீர்கள்? உலகில் உள்ள அனைத்து பம்பு செட்டுகளும், ஒரு மழைப் பொழிவின் அளவுக்கு நீரை அளிக்க முடியுமா? உலகிலுள்ள அனைத்து விசிறிகளும், காற்று வீசும்போது, உங்களுக்குக் கிடைக்கின்ற அளவு காற்றை அளிக்க இயலுமா? தெய்வீகப் பரிசுகளுக்கு நன்றி உள்ளவர்களாக இல்லாமல், உங்களில் பலர் அற்பமானவற்றின் பின் சென்று, விலை மதிக்க முடியாத வாழ்க்கையை வீணடிக்கிறீர்கள். பண்டைய காலத்தின் தலை சிறந்த முனிவர்கள், பக்தியையே, இறைவனுக்கு நன்றி கூறும் முறையாகக் கருதினார்கள். நாம் அனைவரும் வளர்த்துக் கொள்ள வேண்டிய முதல் குணம், தெய்வத்தின் மீதுள்ள நன்றி உணர்வே ஆகும். மக்கள், அவர்களுக்குச் செய்யப் பட்ட சிறிய சேவைப் பணிகளுக்குக் கூட நன்றி உள்ளவர்களாக இருக்கிறார்கள்.இயற்கை மற்றும் பஞ்சபூதங்களின் மூலம், நமக்கு இன்றியமையாத எவ்வளவோ பலன்களை அளித்துள்ள இறைவனுக்கு நாம் நன்றி உள்ளவர்களாக இருப்பது அவசியமல்லவா?
பரிசுத்தமான மற்றும் சிரத்தையான பக்தியை வளர்த்துக் கொண்டு உங்கள் வாழ்க்கைகளைப் புனிதமாக்கிக் கொள்ளுங்கள்.ப்ரேமை இன்றி, தர்மம் ஒரு வெறும் இயந்திரமயமான சடங்கே!- பாபா