azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 15 Aug 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 15 Aug 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
What do we really mean by freedom of the individual? No one in the world has absolute freedom. Some people think that freedom is being able to speak out whatever they feel. True freedom consists in the recognition of that Divinity, by knowing which, all else is known. Freedom should express itself from the heart. ‘Heart’ here is not your physical heart, or related to any particular place, time or individual or a country! ‘Hrudayam” refers to that Divine principle which is equally present everywhere, at all times and in all people, in every country. Only when unity and harmony is achieved from within, will freedom be meaningful. Without these, to talk about freedom means empty words, without any experience in real life. Also, do not think that spirituality means being alone and living in solitude. The aim of spirituality is to sow the seeds of love in all mankind and enable the buds of Peace to blossom in every mind. (Divine Discourse, May 31, 1990)
TRUE FREEDOM CAN BE EXPERIENCED ONLY WHEN YOU ARE FREE
FROM THE IMPULSES OF YOUR MIND! - BABA
தனி மனித சுதந்திரம் என்றால் என்ன என்று நாம் அர்த்தம் செய்து கொள்கிறோம்? உலகில் யாருக்கும் முழுமையான சுதந்திரம் என்பதே இல்லை. சிலர், சுதந்திரம் என்றால், அவர்கள் உணருவதை எல்லாம் வெளிப்படையாகப் பேசுவது என்று நினைக்கிறார்கள். எதை அறிந்து கொண்டால், மற்ற எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடியுமோ, அந்த தெய்வீகத்தை உணருவதில் தான் உண்மையான சுதந்திரம் இருக்கிறது.சுதந்திரம் என்பது இதயத்திலிருந்து வெளிப்பட வேண்டும். ‘’ இதயம்’’ என்றால், உங்களது பௌதீகமான இதயமோ அல்லது ஏதோ ஒரு குறிப்பிட்ட இடமோ, நேரமோ அல்லது தனிமனிதரோ அல்லது ஒரு தேசமோ அல்ல! ‘’ஹ்ருதயம்‘’ என்பது, எங்கும், எப்போதும், எல்லா மனிதருள்ளும், ஒவ்வொரு தேசத்திலும் சமமாக இருக்கும் தெய்வீக தத்துவத்தைக் குறிக்கிறது. ஒற்றுமையும், இசைவும் அகத்திலிருந்து அடையப்பட்டால் மட்டுமே, சுதந்திரம் என்பது அர்த்தமுள்ளதாக இருக்கும். இவை இன்றி, சுதந்திரத்தைப் பற்றிப் பேசுவது என்பது நிஜ வாழ்க்கையில் எந்தவிதமான அனுபவமும் இன்றி பேசப்படும் வெறும் வெற்று வார்த்தைகளே. மேலும், ஆன்மிகம் என்றால், தனியாகவும், தனிமையிலும் இருப்பது என்று பொருளல்ல. அனைத்து மனித குலத்திலும் ப்ரேமையின் விதைகளை விதைத்து, ஒவ்வொரு மனதிலும் சாந்தியின் மொட்டுகள் மலரச் செய்வதே ஆன்மிகத்தின் குறிக்கோள் ஆகும்.
நீங்கள் எப்போது உங்கள் மனதின் உந்துதல்களிலிருந்து விடுதலை பெறுகிறீர்களோ, அப்போது மட்டுமே உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்க முடியும்- பாபா