azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 08 Aug 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 08 Aug 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Selfless action is the ideal to be aimed at. But now, everything is measured by the result, the gain that accrues. If you fan a person out of love, when you stop, the person cannot blame you, but when the paid servant stops, the master takes him to task. In the first case, the act is done without selfish desire (in the nishkama way); there is no aim to seek gain. The desire for gain is like the poisonous fangs; when they are pulled out, the snake of karma is rendered harmless. The correct discipline to acquire the desireless (nishkama) attitude is dedication, and that is possible only when you have intense faith in God. That faith becomes steady through spiritual effort. Now, spiritual effort is like the snacks one eats; the main dishes are all of the world, from the world. However, the spiritual must be the major portion of the food. (Divine Discourse, Sep 15, 1963)
NISHKAMA KARMA UPROOTS THE BESTIALITY IN A PERSON AND
CONFERS DIVINITY ON THAT PERSON. - BABA
தன்னலமற்ற செயலே, குறிக்கோளாக இருக்க வேண்டிய இலட்சியம் ஆகும். ஆனால், இப்போது, ஒவ்வொன்றும் விளைவைப் பொறுத்தே, அதாவது கிடைக்கின்ற லாபத்தைப் பொறுத்தே கணக்கிடப் படுகிறது. நீங்கள் ஒருவருக்கு, ப்ரேமையின் காரணமாக விசிரியை வீசி காற்று படுமாறு செய்யும் போது, நீங்கள் அதை நிறுத்தி விட்டால், அந்த மனிதர் உங்களை குறை கூற முடியாது; ஆனால், கூலிக்கு வேலை செய்யும் ஒரு சேவகர் அதை நிறுத்தினால், எஜமானர் அவர் மீது நடவடிக்கை எடுப்பார். இந்த முதல் சம்பவத்தில், அந்தச் செயல் எந்த விதமான சுயநல ஆசையின்றி (நிஷ்காம முறையில்) செய்யப் பட்டது; எந்த லாபத்தையும் நாடும் நோக்கமே இல்லை. லாபத்திற்கான ஆசை பாம்பின் விஷப்பற்கள் போன்றது; அவற்றைப் பிடுங்கி விட்டால், கர்மா எனும் பாம்பு தீங்கிழைக்க முடியாததாக ஆக்கப் பட்டு விடுகிறது. ஆசையற்ற மனப்பாங்கை அடைவதற்கான சரியான முறை அர்ப்பணிப்பே; இது இறைவன் பால் உங்களுக்குத் தீவிரமான நம்பிக்கை இருந்தால் மட்டுமே சாத்தியம் ஆகும். அந்த நம்பிக்கை ஆன்மிக சாதனையின் மூலம் நிலையானதாக ஆகிறது. இன்றோ, ஆன்மிக சாதனை என்பது ஒருவர் சாப்பிடும் நொறுக்கித் தீனி போல உள்ளது; முக்கியமான பதார்த்தங்கள் எல்லாம் உலகிலிருந்தும், உலகினுடையதாகவும் இருக்கின்றன. ஆனால், ஆன்மிகமே உணவின் பெரும்பாலான பாகமாக இருக்க வேண்டும்.
நிஷ்காம கர்மா ( தன்னலமற்ற செயல்), ஒரு மனிதனில் உள்ள மிருகத் தன்மையை வேரோடு பிடுங்கி எறிந்து, அந்த மனிதருக்கு தெய்வீகத்தை அளிக்கிறது - பாபா