azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 27 Jul 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 27 Jul 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Speech is charged with tremendous power. When, through speech, we communicate to a person something that upsets their balance or shocks them into grief, the words completely drain off their physical strength and mental courage. The person falls on the ground, mentally unable to stand their ground. On the other hand, when, through speech, we communicate something happy or unexpectedly cheering, the person gets the strength of an elephant. Words don’t cost anything but they are priceless. So, they have to be used with care. They must be employed not for gossip, which is barren, but for pure and productive purposes only. The ancients recommended the vow of silence in order to purify speech of its evils. A mind turned inward toward an inner vision of God and speech turned outward toward outer vision of the Lord — both will promote spiritual strength and success. (Ch 18, Vidya Vahini)
GOOD CHARACTER IS BUILT UP BY CONSTANT PRACTICE OF GOOD ACTIONS. - BABA
பேச்சு மகத்தான சக்தி படைத்ததாகும். எப்போது, பேச்சின் மூலம் நாம் ஒருவருக்கு, அவர்களது சமநிலையைக் சீர் குலைக்கும் அல்லது அவர்களை வருத்தத்தில் ஆழ்த்தும் ஏதாவது ஒன்றைத் தெரிவிக்கிறோமோ, அந்த வார்த்தைகள் அவர்களது உடல் சக்தி மற்றும் மனோ தைரியத்தை முற்றிலுமாக வெளியேற்றி விடுகின்றன. மனத்தளவில் நிலை நிற்க முடியாமல், அந்த மனிதர் தரையில் வீழ்ந்து விடுகிறார். மாறாக, எப்போது நாம் பேச்சின் மூலம், மகிழ்ச்சியான அல்லது எதிர்பாராத குதூகலம் அளிக்கும் ஒன்றைத் தெரிவிக்கும் போது, அந்த மனிதருக்கு ஒரு யானை பலம் வந்து விடுகிறது. வார்த்தைகளுக்கு எந்த விலையும் இல்லை; ஆனால் அவை விலை மதிப்பற்றவை. எனவே, அவற்றை கவனத்துடன் பயன் படுத்த வேண்டும். அவற்றை வரண்ட வம்புக்கு அல்லாது, பரிசுத்தமான மற்றும் பயனளிக்கும் நோக்கங்களுக்காகப் பயன் படுத்த வேண்டும். நமது முன்னோர்கள் பேச்சை, அவற்றின் தீயவற்றிலிருந்து பரிசுத்தப் படுத்துவதற்கு மௌன விரதத்தை பரிந்தளித்துள்ளார்கள். இறைவனின் அக தரிசனத்திற்காக உள் நோக்கித் திருப்பப் பட்ட ஒரு மனம், இறைவனின் புற தரிசனத்திற்காக வெளிப்புறம் திருப்பட்ட பேச்சு- இரண்டுமே ஆன்மிக வலிமை மற்றும் வெற்றியை ஊக்குவிக்கும்.
இடையறாத நற்செயல்களை ஆற்றுவதன் மூலமே,
நற்குணநலன்கள் உருவாக்கப் படுகின்றன- பாபா