azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 25 Jul 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 25 Jul 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
The point of view is most often warped; the direction in which thought flows is, ‘How much can I get out of all this, what benefit can I derive from membership, how beneficial it will be for my status, profession, and contacts.’ This has to be changed full circle. The problem should be framed as: ‘How much can I give my fellowmen through this membership? What can I contribute to the fulfilment of its ideals?’ All are eager to take, none is earnest about giving. The reason is absence of love; love that transcends caste, creed, colour, and the fences erected by man between men. Fill your hearts with love, distribute that love to all. Love grows with every gift of love; remember, the heart that pours out love is ever full! God is present in your heart as Love and you are only drawing from Him, when sharing with others. Expansion is love; expansion is life. Contraction is death! (Divine Discourse, Jan 18, 1971)
PURE LOVE WILL NEVER SUBMIT TO THE FORCES OF ENVY OR HATRED, HOWEVER POWERFUL THEY MAY BE. - BABA
(மனிதர்களது) கண்ணோட்டம் பெரும்பாலும் திசை திருப்பப் பட்டதாக இருக்கிறது; எண்ண அலை ஓட்டம் இந்தத் திசையில் தான் இருக்கிறது‘’ இவை எல்லாவற்றிலிருந்தும் நான் எவ்வளவு பெற முடியும்,இந்த உறுப்பினர் பதவியிலிருந்து நான் என்ன நன்மை பெற முடியும், எனது நிலை, தொழில் மற்றும் தொடர்புகளுக்கு இது எவ்வளவு பயனளிக்கும் ‘’. இதை ஒரு முழு வட்டமாகத் திருப்ப வேண்டும். பிரச்சனையை இவ்வாறு அணுக வேண்டும் ; ‘’ இந்த உறுப்பினர் பதவியிலிருந்து எனது சக மனிதர்களுக்கு நான் எவ்வளவு அளிக்க முடியும்? இதன் லட்சியங்களை நிறைவற்றுவதற்கு நான் என்ன பங்களிக்க முடியும்?’’ அனைவரும் எடுத்துக் கொள்வதில் ஆர்வமாக இருக்கிறார்களே அன்றி எவரும் கொடுப்பதில் சிரத்தை உள்ளவர்களாக இல்லை. சாதி, மதம், நிறம் மற்றும் மனிதர்களிடையே மனிதனால் அமைக்கப்பட்ட வேலிகள் ஆகியவற்றிற்கு அப்பாற் பட்ட ப்ரேமை இன்மையே இதற்குக் காரணம். உங்கள் இதயங்களை ப்ரேமையால் நிரப்பி, அந்த ப்ரேமையை அனைவருக்கும் பகிர்ந்து அளியுங்கள். ப்ரேமையின் ஒவ்வொரு பரிசின் மூலம் ப்ரேமை வளருகிறது; ப்ரேமையை கொட்டித் தீர்க்கும் இதயம் எப்போதும் நிரம்பியே இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்! இறைவன் உங்கள் இதயத்தில் ப்ரேமையாக உறைகிறான்; பிறரிடம் பகிர்ந்து கொள்ளும் போது, நீங்கள் அவனிடமிருந்து அதை வாங்கிக் கொள்ள மட்டுமே செய்கிறீர்கள். பரந்து விரிவதே ப்ரேமை, பரந்து விரிவதே வாழ்க்கை. குறுகுவது என்பதே மரணம்!
அவை எவ்வளவு வலிமையானவையாக இருந்தாலும்,பொறாமை அல்லது த்வேஷத்தின் சக்திகளுக்கு, பரிசுத்தமான ப்ரேமை ஒரு போதும் அடி பணியாது - பாபா