azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 19 Jul 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 19 Jul 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Remembrance of the Lord's name is the method of crossing over the ocean of the worldly life for this age; remembering the Lord by means of His Name is enough to save man. The Lord is Aanandamaya (of the nature of Bliss); He is also Aananda (divine bliss), which is to be tasted through the Name. It is Sat-Chit-Ananda (Being-Awareness-Bliss Absolute). You may doubt whether such a small word like Rama or Sai or Krishna can take you across the boundless sea of worldly life. People cross vast oceans on a tiny raft; they are able to walk through dark jungles with a tiny lamp in their hands. The raft need not be as big as the sea. The Name, even the Pranava (Om) which is smaller, has vast potentialities. The recitation of the Name is like the operation of boring, to tap underground water; it is like the chisel-stroke that will release the image of God imprisoned in the marble. Break the encasement and the Lord will appear. (Divine Discourse, Jan 13, 1965)
AN INDIVIDUAL DEVOTED TO GOD KNOWS NO FAILURE. THE NAME OF THE LORD, WHEN TAKEN SINCERELY, WILL HELP YOU OVERCOME ALL OBSTACLES, HOWEVER MIGHTY THEY ARE! - BABA
இறைநாமஸ்மரணையே இந்த யுகத்தில்,ஸம்ஸார சாகரத்தைக் கடப்பதற்கான முறையாகும்; இறைவனை , அவனது திருநாமத்தின் மூலம் நிலைவு கூறுவதே, மனிதனைக் காக்கப் போதுமானதாகும்.இறைவன் ஆனந்தமய ( ஆனந்தத்தின் இயல்பு ); அவன் திருநாமத்தின் மூலம் சுவைக்கப் படக்கூடிய ஆனந்தமும் ( தெய்வீக ஆனந்தம்) ஆவான். அதுவே சத்-சித்-ஆனந்தம். எப்படி ஒரு சிறிய வார்த்தையான ராமா அல்லது சாய் அல்லது கிருஷ்ணா, கரைகளே அற்ற ஸம்ஸார சாகரத்தை நீங்கள் கடப்பதற்குப் போதுமானதாக இருக்கும் என நீங்கள் சந்தேகப் படலாம். மனிதர்கள் பரந்து விரிந்த சமுத்திரத்தை ஒரு சிறிய படகின் மூலம் கடக்கிறார்கள்; அவர்களால், தங்கள் கைகளில் ஏந்திய ஒரு சிறிய விளக்கைக் கொண்டு இருண்ட காடுகளில் நடந்து செல்ல முடிகிறது. படகு, கடலைப் போல அவ்வளவு பெரியதாக இருக்க வேண்டும் என்பதல்ல. இறைவனது திருநாமம், ஏன் அதை விடச் சிறிதான ப்ரணவமும் (ஓம்), அளவற்ற திறன்களைக் கொண்டதாகும். இறை நாமஸ்மரணை என்பது, நிலத்தடி நீரைக் கொண்டு வர பயன்படுத்தப் படும் ஆழ்துளைக் குழாயின் செயல்பாட்டைப் போன்றது; அது, சலவைக் கல்லில் பொதிந்துள்ள இறைவனது திருவுருவத்தை வெளிப்படுத்தும் உளியின் அடியைப் போன்றது. வெளி உறையை உடைத்தெறியுங்கள்; இறைவன் உங்கள் முன் தோன்றுவான்.
இறைவனிடம் பக்தி கொண்ட ஒருவர், தோல்வியையே அறியார்.இறைவனது திருநாமத்தை சிரத்தையுடன் எடுத்துக் கொள்ளும்போது, அனைத்து தடைகளையும் வெல்வதற்கு, எவ்வளவு வலிமையானதாக அவை இருந்தாலும்,அது உங்களுக்கு உதுவும்- பாபா