azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 16 Jul 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 16 Jul 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
The word surrender has been misinterpreted and people promote idleness in the name of surrender. We think that our mind, thought, and body have been surrendered to the Lord. Your mind is not under your own control and under such circumstances, how can you hold it and give it to the Lord? You have no control over your own body. If you have a small cut, blood oozes from your body and you run to a doctor. If this is your body and if you have complete control over it, why is it that you are not able to control the outflow of the blood? That being the case, to say that you have surrendered your mind and body to the Lord is a statement which is untrue. This word ‘surrender’ conveys that there is someone who gives and someone who accepts, and that you are surrendering to someone. There is a feeling of duality implied in this word surrender. The true meaning of surrender is the recognition of the fact that in everyone and everywhere God is present. (Ch 3, Summer Showers, 1974)
DOING ONE’S DUTY RIGHTEOUSLY IS THE HIGHEST SPIRITUAL ENDEAVOUR. - BABA
சரணாகதி என்ற வார்த்தை தவறாக பொருள் கொள்ளப்பட்டு, மனிதர்கள் சரணாகதி என்ற பெயரில் சோம்பேறித் தனத்தை ஊக்குவிக்கிறார்கள். நாம், நமது மனம், சிந்தனை மற்றும் உடலை இறைவனிடம் சரணாகதியாகக் கொடுத்து விட்டோம் என்று நினைக்கிறோம். உங்கள் மனம் உங்கள் ஆதிக்கத்திலேயே இல்லை, அப்படி இருக்க அதை எவ்வாறு பிடித்து இறைவனிடம் நீங்கள் கொடுக்க முடியும்? உங்களது சொந்த உடலின் மீதும் உங்களுக்கு கட்டுப்பாடு இல்லை. உங்களுக்கு ஒரு சிறிய காயம் ஏற்படுகிறது, உங்கள் உடலிலிருந்து இரத்தம் கசிகிறது, நீங்கள் ஒரு வைத்தியரிடம் ஓடுகிறீர்கள். இது உங்களது உடல்; அதன் மீது உங்களுக்கு முழுமையான ஆதிக்கம் இருக்குமானால், உங்களால் அந்த இரத்தக் கசிவையும், அது வெளிப்படுவதையும் ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை? அப்படி இருக்கும் போது, நீங்கள் உங்கள் மனதையும், உடலையும் இறைவனிடம் சரணாகதி அடையச் செய்து விட்டேன் என்று கூறுவது உண்மையல்ல. ‘’ சரணாகதி ‘’ என்ற வார்த்தை, யாரோ ஒருவர் கொடுக்கிறார், யாரோ ஒருவர் ஏற்றுக் கொள்கிறார் என்றும் நீங்கள் யாரோ ஒருவரிடம் சரணாகதி அடைகிறீர்கள் என்பதும் போன்ற பொருளைத் தருகிறது. இந்த சராணாகதி என்ற வார்த்தையில் இருமையின் உணர்வு உள்ளது. ஒவ்வொருவருள்ளும், ஒவ்வொரு இடத்திலும் இறைவன் இருக்கிறான் என்ற உண்மையை உணருவதே, சரணாகதி என்பதன் உண்மையான பொருளாகும்.
ஒருவரது கடமையை, தார்மீகமாகச் செய்வதே
மிக உயர்ந்த ஆன்மிக சாதனையாகும் - பாபா