azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 13 Jul 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 13 Jul 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

The power of faith is illustrated in an incident from the life of Christ. Once a blind man approached Jesus and prayed: "Lord! Restore my sight." Jesus asked him: "Do you believe that I can restore your sight?” "Yes, Lord!" the man said. "If that is so, then open your eyes and see," said Jesus. The blind man opened his eyes and got his sight. Likewise, people pray to Swami to give something or other. Do you believe that I have the power to give what you seek? My response is dependent on your faith. People today are like an individual standing on the ground wishing to see the pilot of a plane moving in the sky. The only way the person can see the pilot is by getting into the plane. To experience God you have to aspire for a vision of God. That is the way to lead an ideal and blissful life. (Divine Discourse, Sep 7, 1997)
DEPRESSION, DOUBT, CONCEIT - THESE ARE RAHU AND KETHU TO THE SPIRITUAL ASPIRANT. - BABA
ஏசு கிருஸ்துவின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம், நம்பிக்கையின் வலிமையை எடுத்துக் காட்டுகிறது. ஒரு முறை பார்வையற்ற ஒரு மனிதன் ஏசு கிருஸ்துவை அணுகி, ‘’ பகவானே! எனது பார்வையை மீட்டுத் தாருங்கள் ‘’ எனப் பிரார்த்தித்தான். ஏசு கிருஸ்து, அவனிடம், ‘’ என்னால் உன் பார்வையை மீட்டுத் தர முடியும் என் நீ நம்புகிறாயா?’’ என்று கேட்டார். அதற்கு அந்த மனிதன், ‘’ ஆமாம்! பகவானே ‘’ என்றான். ஏசு கிருஸ்து, ‘’ அப்படி என்றால், பின்னர் உன் கண்களைத் திறந்து பார்’’ என்றார். பார்வையற்ற அந்த மனிதன் அவனது கண்களைத் திறந்தான்; அவனுக்குப் பார்வை கிடைத்து விட்டது. அதே போல, பல மனிதர்கள் சுவாமியிடம் ஏதோ ஒன்றைத் தருமாறு பிரார்த்திக்கிறார்கள். நீங்கள் நாடும் அதைத் தரக்கூடிய சக்தி எனக்கு இருக்கிறது என நீங்கள் நம்புகிறீர்களா? எனது பதில், உங்களது நம்பிக்கையைப் பொறுத்து இருக்கிறது. இந்நாளில் மனிதர்கள், தரையில் நின்று கொண்டு, ஆகாயத்தில் பறக்கும் ஒரு விமானத்தின் விமான ஓட்டியைப் பார்க்க விரும்பும் ஒரு மனிதனைப் போல இருக்கிறார்கள். அந்த விமான ஓட்டியைக் காண ஒரே வழி அந்த மனிதர், விமானத்திற்குள் ஏறிச் செல்வது தான். இறைவனை அனுபவிப்பதற்கு நீங்கள் இறைவனது ஒரு தரிசனத்திற்காக ஏங்க வேண்டும். ஒரு இலட்சிய மற்றும் ஆனந்தமான வாழ்க்கை வாழ்வதற்கு அதுவே வழி.
மன அழுத்தம்,சந்தேகம்,மற்றும் அகந்தை –
இவை ஆன்மீக சாதகருக்கு ராகு, கேது போன்றவை- பாபா