azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 09 Jul 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 09 Jul 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Advesta Sarva Bhutanam (bear no ill-will against living being), Sarva bhuta hite ratah (always engage in promoting the well being of all beings), Samah shatrau cha mitre cha cha (consider foe and friend alike) - jewels like these contained in the Gita, are, as known to all, pointers to the need for Universal Love. By declaring that man shall not bear ill-will towards the entire world of living beings, the Gita is positing a lesson with invaluable inner meaning that in all beings and even in all things, there is a moving, revolving, and active illumining Principle which is the Divine, appropriately called as Atma. It is a wrong against God, this omnipresent Divine, to hate living beings, to injure them; that is to say, it is as bad as hating and injuring oneself - the reason being that the injurer is as much a living being with God as his core, as the injured. - Divine Discourse, Jul 29, 1969.
WHOEVER LOVES AND SERVES ALL, HIM THE LORD LOVES AND HONOURS - BABA
அத்வேஷ்டா ஸர்வ பூதானாம் (எந்த ஜீவராசியின் மீதும் த்வேஷம் இன்றி இருக்கவும் ), ஸர்வ பூத ஹித ரதஹ (அனைத்து ஜீவராசிகளின் நலனை எப்போதும் பேணுவாயாக ), ஸம ஸத்ரு ச மித்ர ச ச ( பகைவனையும், நண்பனையும் ஒன்றாகக் கருதுக ) - ஸ்ரீமத் பகவத் கீதையில், அனைவரும் அறிந்த இப்படிப் பட்ட ரத்தினங்கள், பிரபஞ்சமயமான ப்ரேமையின் அவசியத்தைச் சுட்டிக் காட்டுகின்றன. உலகனைத்தும் உள்ள அனைத்து ஜீவராசிகளிடமும் மனிதன் எந்த த்வேஷமும் கொண்டு இருக்கக் கூடாது என்று அறிவிப்பதன் மூலம், அனைத்து ஜீவராசிகளிலும், அவற்றிற்குள்ளும் கூட, ஆத்மா என சரியாக அழைக்கப்படும், அசையும், சுழலும், ஒளியூட்டும் ஒரு தெய்வீக தத்துவம் உள்ளது, என்பதை ஸ்ரீமத் பகவத் கீதை முன் வைக்கிறது. ஜீவராசிகளை வெறுப்பது, அவைகளைக் காயப்படுத்துவது என்பது அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்துள்ள தெய்வத்திற்கு எதிரான குற்றமே; அதாவது, ஒருவர் தன்னையே வெறுப்பது மற்றும் காயப்படுத்திக் கொள்வதைப் போல அவ்வளவு மோசமானது- காரணம் என்ன என்றால், காயப்படுபவரைப் போல, காயப்படுத்துபவரும், இறைவனை மூலாதாரமாகக் கொண்ட ஒரு ஜீவராசியே.
எவர் ஒருவர் அனைவரையும் நேசித்து, அனைவருக்கும் சேவை புரிகிறாரோ, அவரை, இறைவனும் நேசித்து கௌரவிக்கிறான் - பாபா