azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 05 Jul 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 05 Jul 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Poornima means effulgent Full Moon. Guru means (Gu-ignorance; Ru-destroyer) He, who removes the darkness and delusion from the heart and illumines it with Higher Wisdom. The Moon and the Mind are inter-related as object and image. Today, the Moon is full, fair and cool, its light is fresh, pleasant and peaceful. So the light of the Mind too must be pleasing and pure. In the firmament of your Heart, Moon is the Mind. There are thick and heavy clouds, sensual desires and worldly activities, which mar your joy at the Light of the Moon. Therefore, welcome the strong breeze of Love to scatter the clouds and confer on you the cool glory of moonlight. When devotion shines in full, the sky in the heart becomes a bowl of beauty and your life is transformed into a charming avenue of Ananda. That beauty of heart, that Ananda (bliss), must be won through the mind, by engaging in Sadhana (spiritual practice). - Divine Discourse, Jul 29, 1969.
IF THERE IS NO TRANSFORMATION OF THE HEART, OF WHAT AVAIL ARE SPIRITUAL SADHANAS? - BABA
பூர்ணிமா என்றால், பிரகாசிக்கும் முழு நிலவு என்று பொருள். குரு என்றால் ( கு- அறியாமை; ரு- அழிப்பவர் ), இதயத்திலிருந்து இருள் மற்றும் மாயையை நீக்கி, அதை உயர் ஞானத்தினால் பிரகாசிக்கச் செய்பவர் என்று பொருள். நிலவும், மனமும், பொருளும், பிரதிபிம்பம் போல ஒன்றுக்கு ஒன்று சம்பந்தப் பட்டவை. இன்று நிலவு முழுமையாகவும், வெண்மையாகவும்,குளிர்ச்சியாகவும் இருக்கிறது; அதன் ஒளி புதியதாகவும்,இனிமையாகவும், சாந்தமாகவும் இருக்கிறது. எனவே, மனதின் ஒளியும் கூட இனிமையாகவும்,தூய்மையாகவும் இருக்க வேண்டும். உங்களது இதயம் எனும் ஆகாயத்தில், நிலவே, மனமாகும். புலனாசைகள் மற்றும் உலகியலான நடவடிக்கைகள் எனும் அடர்த்தியான மற்றும் கருமையான மேகங்கள், நிலவொளியின் உங்கள் ஆனந்தத்தை மறைக்கின்றன. எனவே, அந்த மேகங்களைக் கலைத்து, உங்களுக்கு நிலவொளியின் குளுமையான மகத்துவத்தை அளிக்கும் ப்ரேமையின் வலிமையான காற்றிற்கு வரவேற்பளியுங்கள். பக்தி பரிபூரணமாகப் பிரகாசிக்கும் போது, இதய ஆகாயம், சுந்தரத்தின் ஒரு கிண்ணமாக ஆகி விடுகிறது; உங்களது வாழ்க்கை ஆனந்தத்தின் ஒரு அழகான இடமாக மாறி விடுகிறது. அந்த இதயத்தின் சுந்தரத்தை, அந்த ஆனந்தத்தை, மனதின் மூலம் ஆன்மிக சாதனையில் ஈடுபடுவதால் அடைய வேண்டும்.
இதயத்தில் மாற்றம் ஏற்படவில்லை என்றால், ஆன்மிக சாதனைகளால் என்ன பயன்? - பாபா