azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 03 Jul 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 03 Jul 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Your time must be used not only in the task of collecting information and earning certain skills that will give you an income on which you can live; it must also be used to acquire the art of being content and calm, collected and courageous. You must also cultivate an ardent thirst for knowing the truth of the world and of your own Self. Let your words be like honey; your hearts be as soft as butter! Your outlook must be like the lamp - illumining, not confusing. Be like the umpire on the football field, watching the game, judging the play according to the rules laid down, unaffected by success or reverse of one team vs another! Remember, you are all pilgrims, moving along this land of action (Karma kshetra) to the goal of land of righteousness (Dharma kshethra). Be humble and strong to resist temptation. Do not yield like cowards to the sly insinuations of the senses. (Divine Discourse, Mar 13, 1964.)
CONSIDER ALL YOUR ACTS AS WORSHIP. DUTY IS GOD, WORK IS WORSHIP. WHATEVER HAPPENS
ACCEPT IT GLADLY AS HIS HANDIWORK, A SIGN OF HIS COMPASSION. - BABA
உங்கள் நேரம், சில செய்திகளை சேகரிப்பதற்கும், நீங்கள் வாழ்வதற்குத் தேவையான வருமானத்தை ஈட்டுவதற்கான சில திறன்களைப் பெறுவதற்காகவும் மட்டுமே செலவிடப் படாமல், சாந்தமாக, நிதானமாக மற்றும் தைரியமாக இருக்கும் கலையைப் பெறுவதற்காகவும் கூட அது பயன்படுத்த வேண்டும். இந்த உலகம் மற்றும் உங்களது சொந்த ஆத்மாவைப் பற்றிய உண்மையைத் தெரிந்து கொள்வதற்கான தீராத வேட்கையையும் கூட நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் வார்த்தைகள் தேனாக இருக்கட்டும்; உங்கள் இதயங்கள், வெண்ணெயைப் போல மிருதுவாக இருக்கட்டும்! உங்களது கண்ணோட்டம், குழப்பத்தை ஏற்படுத்தாது, விளக்கைப் போல பிரகாசமளிப்பதாக இருக்க வேண்டும். கால் பந்து மைதானத்தில், விளையாட்டை, வரையறுக்கப் பட்ட விதிகளின் படி ஆராய்ந்து, ஒரு குழுவோ அல்லது மற்றதன் வெற்றி அல்லது தோல்வியைப் பற்றிப் பாதிக்கப் படாமல் இருக்கும், நடுவரைப் போல இருங்கள்! நீங்கள் அனைவருமே, கர்ம பூமியிலிருந்து (கர்ம க்ஷேத்ர), தர்ம பூமியின் (தர்ம க்ஷேத்ர) இலக்கை நோக்கிச் சென்று கொண்டு இருக்கும் தீர்த்த யாத்திரீகர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பணிவாகவும், தூண்டுதலை எதிர்க்கும் வலிமையையும் கொண்டவர்களாக இருங்கள். புலன்களின் நயவஞ்சகங்களுக்குக் கோழைகளைப் போல அடி பணிந்து விடாதீர்கள்.
உங்கள் செயல்கள் அனைத்தையும் வழிபாடாகக் கருதுங்கள். கடமையே கடவுள். உழைப்பே வழிபாடு. எது நடந்தாலும், அதை இறைவனது செயல் மற்றும் அவனது கருணையின் ஒரு சின்னமாக மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்- பாபா