azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 25 Jun 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 25 Jun 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
“The leaf-plate on which a full lunch has been served will lie low on the floor. The leaf-plate on which nothing is placed will hop high with every gust of wind.” Thus says the proverb. So too, the person who has much scholarship and many skills will lead an unassuming life. But one who has not derived genuine education and the strength it can confer lives in pomp and pride. That person struggles to hide defects from being known to others. And, in the end, the struggles don’t succeed. One meets with double ruin — one doesn’t experience spiritual bliss (ananda) and one doesn’t impart it to others. In the end, one becomes the target of ridicule. Therefore, don’t allow the desire for ostentation to enter the mind; don’t allow egotism to approach you. Be humble and be loyal to high ideals. Only then can you serve the cause of world peace and prosperity. (Vidya Vahini, Ch 15)
MANKIND CAN FIND HAPPINESS IN UNITY, NOT IN DIVERSITY. - BABA
“முழு உணவு பரிமாறப்பட்ட சாப்பாட்டு இலை தரையில் கீழே இருக்கும். எதுவுமே இல்லாத சாப்பாட்டு இலை, ஒவ்வொரு காற்று வீசலுக்கும் மேலே பறந்து போய் விடும்’’ என்பது ஒரு பழமொழி. அதைப் போலவே, மிகுந்த பாண்டித்யமும், பல திறன்களையும் கொண்ட ஒருவர், ஒரு ஆரவாரமற்ற எளிய வாழ்க்கை நடத்துவார். ஆனால் உண்மையான கல்வியும், அது தரும் வலிமையும் அற்ற ஒருவர் படாடோபத்திலும், தற்பெருமையிலும் வாழ்வார். அந்த மனிதர், அவரது குறைகளை பிறரிடமிருந்து மறைப்பதற்கு படாத பாடு படுவார். முடிவில், அந்தப் போராட்டம் வெற்றி பெறாது போகும். ஒருவர் இரண்டு விதமான அழிவைச் சந்திப்பார்- ஆன்மிக ஆனந்தத்தை அனுபவிக்க மாட்டார்; அதைப் பிறருக்கு அளிக்கவும் மாட்டார். இறுதியில், அவர் இகழ்ச்சிக்கு இரையாவார். எனவே, டாம்பீகத்தின் ஆசையை மனதில் நுழைய விடாதீர்கள்; அகந்தையை உங்களை அணுக விடாதீர்கள். பணிவாகவும், உயர்ந்த லட்சியங்களைப் பற்றிக் கொண்டும் இருங்கள். அதன் பிறகே, நீங்கள் உலகத்தின் சாந்தி மற்றும் செழிப்பிற்காக சேவை ஆற்ற முடியும்.
மனிதகுலம் ஒற்றுமையில் தான் சந்தோஷத்தைக் காண முடியுமே அன்றி, வேற்றுமையில் அல்ல- பாபா