azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 20 Jun 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 20 Jun 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Even though the human body is impermanent, it has to be carefully looked after, because it enshrines the divine Atma. Without a healthy and strong body, you will easily fall a victim to numerous ailments. Each organ has its own beauty, which has to be fostered. A weak and unhealthy body is incapable of any resolute action. Pure, noble, and sublime ideas can emanate only from a strong and healthy body. All religions are agreed on this point. Although the body is impermanent, special care should be taken to maintain it properly because it provides residence for the eternal Atma. The divine spirit illumines the body although the latter is composed of flesh, blood, faeces, urine and other foul smelling and impure things. Atma does not grow with the body, nor does it decay along with the body. The Atma principle is not subject to growth or decay. It is ever pure, precious and immutable. (Ch 03, Summer Showers 1990)
LOOK UPON THE BODY AS A SHRINE IN WHICH THE DIVINE IS INSTALLED.
DEDICATE ALL ACTIONS TO GOD. - BABA
மனித உடல் நிலையற்றது என்றாலும், அதில் தெய்வீக ஆத்மா கொலு வீற்று இருப்பதால், அது கவனமாகப் பார்த்துக் கொள்ளப் பட வேண்டும். ஒரு ஆரோக்யமான மற்றும் வலிமையான உடல் இன்றி, நீங்கள் பல விதமான வியாதிகளுக்கு ஆளாகி விடுவீர்கள். ஒவ்வொரு அங்கத்திற்கும், பேணிக்காக்க வேண்டிய அதற்கே உரித்தான அழகு உண்டு. ஒரு பலவீனமான மற்றும் ஆரோக்யமற்ற உடல் எந்த விதமான தீர்மானமான செயலாற்றலுக்கும் ஏற்றதல்ல. பரிசுத்தமான, சீரிய மற்றும் விழுமிய சிந்தனைகள் ஒரு வலிமையான மற்றும் ஆரோக்யமான உடலிலிருந்து மட்டுமே எழ முடியும். அனைத்து மதங்களும் இந்த விஷயத்தில் ஒத்துப் போகின்றன.உடல் நிலையற்றது என்றாலும், அது நிரந்தரமான ஆத்மாவின் உறைவிடம் என்பதால், அதைச் சரியாக பராமரிக்க தனிப்பட்ட கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். உடலனாது, தசை, ரத்தம், மலம், சிறுநீர் மற்றும் பிற துர்நாற்றம் கொண்ட மற்றும் அசுத்தமான பொருட்களால் ஆனது என்றாலும், தெய்வீக ஆத்மா அதைப் பிரகாசிக்கச் செய்கிறது.ஆத்மா உடலுடன் சேர்ந்து வளருவதுமில்லை, அதோடு சேர்ந்து சிதைவதுமில்லை.ஆத்ம தத்துவம், வளர்ச்சி அல்லது சிதைவுக்கு உட்பட்டதல்ல.அது எப்போதும் பரிசுத்தமானதும், விலைமதிப்பற்றதும், மாறாததும் ஆகும்.
உடலை, இறைவன் உறையும் ஆலயமாகக் கருதுங்கள். அனைத்து செயல்களையும் இறைவனுக்கு அர்ப்பணியுங்கள்- பாபா