azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 16 Jun 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 16 Jun 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

As part of religions, creeds and cults may exist as branches of a tree. None should condemn them as wrong. Also, no branch should fight against another or compete with another. When that happens, the tree will be destroyed and all will end in ruin. When creeds indulge in competitive rivalry, religion is ruined and the world is destroyed. Only One exists; wise describe it in many ways (Ekam sath; viprah bahudha vadanti). Each of us may have different ideas on the nature and characteristics, form and attributes of God. One person may believe God as having qualities and form of humans. Another may believe in a God devoid of human form and signs, but yet manifesting in all embodiments. Another may believe in God as altogether formless. The real truth is, all have faith in God, in a mysterious power (sakti) that is the source, support, and sustenance of all, a power that subsumes all creation! (Vidya Vahini, Ch 13)
MANKIND CAN FIND HAPPINESS IN UNITY, NOT IN DIVERSITY. - BABA
மதங்களின் அங்கமாக, ஒரு மரத்தின் கிளைகளைப் போல, உட்பிரிவுகளும், வழிபாட்டு முறைகளும் இருக்கக் கூடும். எவரும் அவை தவறானவை எனக் கண்டனம் செய்யக் கூடாது. மேலும், ஒரு கிளை மற்றொன்றுடன் சண்டையிடவோ அல்லது போட்டி போடவோ கூடாது. அப்படி நடந்தால், மரமே அழிக்கப் பட்டு, அனைத்தும் நாசமாகி விடும். உட்பிரிவுகள் போட்டா போட்டியில் ஈடுபடும் போது, மதமே நசிந்து, உலகமும் அழிக்கப் பட்டு விடும். இருப்பது ஒன்றே ஒன்றுதான்; அறிஞர்கள் அதைப் பலவிதமாக வர்ணிக்கிறார்கள் (ஏகம் சத்; விப்ரா பஹூதா வதந்தி). நம் ஒவ்வொருவருக்கும், இறைவனின் இயல்பு மற்றும் குணாதிசியங்கள், ரூபம் மற்றும் அம்சங்களைப் பற்றிய வெவ்வேறு அபிப்ராயங்கள் இருக்கலாம். ஒரு மனிதர், இறைவன் குணங்களை உடையவராகவும், மனிதர்களின் ரூபம் கொண்டவராகவும் இருப்பதாக நம்பக் கூடும். மற்றொருவர், மனித ரூபங்கள் மற்றும் சின்னங்கள் அற்றவராகவும் ஆனால், அனைத்து ரூபங்களிலும் வெளிப்படுபவராகவும் இருக்கும் ஒரு இறைவனை நம்பக் கூடும். வேறொருவர், ரூபங்களே அற்ற இறைவன் மீது நம்பிக்கை வைத்திருக்கக் கூடும். அனைத்திற்கும் ஆதாரமாக, அனுதுணையாக, வாழ்வாதாரமாக, அனைத்து படைப்பையும் தன்னுள் வைத்துக் கொண்டுள்ள ஒரு மர்மமான சக்தியான ஒரு இறைவன் மீது அனைவருக்கும் நம்பிக்கை இருக்கிறது என்பது தான் அப்பட்டமான உண்மை !
மனிதகுலம் ஒற்றுமையில் தான் சந்தோஷத்தைப் பெற முடியுமே அன்றி, வேற்றுமையில் அல்ல- பாபா