azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 15 Jun 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 15 Jun 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
When you come across a big fault in others, just consider it to be trivial. Then you will not be critical. Suppose there is a small fault in you; try to magnify it such that you will never think of committing a similar fault again. By looking at it that way, you will never have occasion to be guilty of the same fault again. On the other hand, if you conceal your fault and try to point out the fault of others, it will not be good either for you or for the others. Do not always lead in pointing out others' faults. Also, if anyone points out a fault in you, humbly accept it, because you, by yourself, will not be able to find out where you are in the wrong. It is difficult to identify your own faults, because your vision is directed outward, you will not be able to find the fault in your own nature! (Ch 16, Summer Showers 1978)
BEFORE YOU POINT OUT ONE FAULT IN OTHERS,
EXAMINE THRICE WHETHER THERE IS ANY FAULT IN YOU. - BABA
நீங்கள் மற்றவர்களுடைய ஒரு மிகப் பெரிய தவறைக் காணும்போது, அதை மிகவும் அற்பமானதாகக் கருதுங்கள். பின்னர், நீங்கள் அதை விமர்சிக்க மாட்டீர்கள். உங்களுள் ஒரு சிறிய தவறு இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள்; அப்படிப் பட்ட ஒரு தவறை நீங்கள் மறுபடியும் ஒரு போதும் செய்வதைக் கூட எண்ணாமல் இருக்கும் அளவிற்கு, அதைப் பெரிது படுத்த முயலுங்கள். அதை இவ்வாறு பார்ப்பதனால்,நீங்கள் அதே தவறை ஒரு போதும் மறுபடியும் செய்வதற்கான வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்காது. மாறாக, நீங்கள் உங்கள் தவறை மறைத்து,பிறரது குறைகளைச் சுட்டிக் காட்ட முயன்றால், அது உங்களுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ நல்லதல்ல. பிறரது குறைகளை எப்போதும் சுட்டிக் காட்டுவதில் முந்தாதீர்கள். மேலும், யாராவது உங்களுள் ஒரு குறையைச் சுட்டிக் காட்டினால், பணிவுடன் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்; ஏனெனில், உங்களாலேயே, நீங்கள் எங்கு தவறு செய்கிறீர்கள் என்பதை கண்டு கொள்ள இயலாது.உங்களது சொந்தக் குறைகளை இனம் கண்டு கொள்வது மிகவும் கடினம்; ஏனெனில், உங்களது கண்ணோட்டம் வெளிப்புறமாகச் செல்வதால், உங்களது சொந்த இயல்பில் உள்ள தவறை உங்களால் கண்டு கொள்ள முடியாது !
நீங்கள் பிறரிடம் ஒரு குறையைச் சுட்டிக் காட்டுவதற்கு முன், மூன்று முறை உங்களுள் ஏதாவது குறை இருக்கிறதா எனச் சோதித்துப் பாருங்கள்- பாபா