azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 14 Jun 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 14 Jun 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

So long as there is the feeling of anger and ego in our hearts, we will not be able to feel well in our life; we will feel sick in our mind. One’s anger is one’s greatest enemy and one’s calmness is one’s protection. The one who is possessed by anger will be hated by people because the person will commit a number of bad deeds. Sometimes, ego also joins the feeling of anger. Living life obsessed with pride, ego and anger is harmful. If we aim at transcendental reality and Divinity, we must decide to bring this great emotion of anger under control. While the funeral pyre consumes the dead, chinta, or an agitated mind, reduces to ashes the living body. It is a living death if one is obsessed by pride, ego and anger. Anger is caused by weakness. It is not the weakness of the body but of the mind. To give strength to our mind and remove the weakness from our mind, it is necessary to fill it with good thoughts, good feelings and good ideas. (Ch 17, Summer Showers 1978)
ANGER IS CAUSED BY THE WEAKNESS OF OUR MINDS. STRENGTHEN YOUR MIND
BY FILLING IT WITH NOBLE THOUGHTS AND GOD’S NAME. - BABA
நமது இதயங்களில் கோபம் மற்றும் அகந்தையின் உணர்வுகள் இருக்கும் வரை, நாம் வாழ்க்கையில் நல்ல விதமாக உணர மாட்டோம். நாம் மன நோயுற்றவர்களாக இருப்போம். ஒருவரது கோபமே ஒருவரது மிகப் பெரிய எதிரி; ஒருவரது அமைதியே ஒருவரது பாதுகாப்பு. கோபத்தால் ஆட்கொள்ளப் பட்டவர் மக்களால் வெறுக்கப் படுவார்;ஏனெனில், அந்த மனிதர் பல தீய செயல்களைச் செய்வார்.சில சமயம், அகந்தையும் கூட கோப உணர்வுடன் சேர்ந்து கொள்ளும். தற்பெருமை,அகந்தை மற்றும் கோப வெறி பிடித்த வாழ்க்கை வாழ்வது தீமை பயக்கும். நாம் அனைத்திற்கும் அப்பாற்பட்ட உண்மை நிலையான தெய்வீகத்தை அடைய முற்பட்டால், நாம் இந்த மிகப் பெரிய உணர்வான கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வர முடிவு எடுக்க வேண்டும். ஈமச் சடங்கின் சிதை இறந்த உடலை எரிக்கிறது; சிந்தா அல்லது குழப்பமான மனது உயிரோடு இருக்கும் உடலையே சாம்பலாக்கி விடுகிறது. ஒருவர் தற்பெருமை, அகந்தை மற்றும் கோபத்தின் வெறி பிடித்தவராக இருந்தால், அவர் ஒரு நடமாடும் பிணமே. கோபம், பலஹீனத்தால் ஏற்படுகிறது. அது உடல் ரீதியான பலஹீனமல்ல,மன ரீதியானது. நமது மனதிற்கு வலிமை அளித்து, மனதிலிருந்து பலஹீனத்தை நீக்கி விடுவதற்கு, அதை நல்லெண்ணங்கள், நல்லுணர்வுகள் மற்றும் நற்சிந்தனைகளால் நிரப்புவது அவசியமே.
கோபம், பலஹீனத்தால் ஏற்படுகிறது.சீரிய சிந்தனைகள் மற்றும் இறைவனது நாமத்தால் அதை நிரப்பி, உங்கள் மனதை வலுவாக்குங்கள்- பாபா