azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 11 Jun 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 11 Jun 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
You are the dearly loved children of the Lord. You are as pure and as sacred as air. Don’t condemn yourselves as sinners. You are lion cubs, not sheep. You have taken birth as inheritors of eternal bliss. You are wavelets of immortality, not bodies compounded from matter. Material objects are here to serve you at your bidding: not the other way around. Don’t think that scriptures (Vedas) lay down a bundle of frightening rules, regulations and laws. Every rule is given to you by the Lord, as law-giver. All elements in the cosmos, every particle everywhere, are acting every moment as ordered by Him, remember! No worship can be higher and more beneficial than serving such a Lord. One has to offer love to Him, more love than one bears to anything else in this world and the next. He must be loved as the One and Only. Remember Him adoringly with such love always! (Vidya Vahini, Ch 13)
LOVE FOR GOD (DAIVA-PREETI) AND FEAR OF SIN (PAPA-BHEETI)
ARE THE ONLY TWO REQUISITES NEEDED TO SANCTIFY YOUR LIFE. - BABA
நீங்கள் இறைவனின் மிகவும் நேசிக்கப் படும் குழந்தைகள்.நீங்கள் காற்றைப் போன்று பரிசுத்தமான மற்றும் புனிதமானவர்கள். நீங்கள் உங்களையே பாவிகள் என்று கண்டனம் செய்து கொள்ள வேண்டாம். நீங்கள் சிங்கக் குட்டிகள், ஆட்டு மந்தை அல்ல. நீங்கள் நிரந்தரமான ஆனந்தத்தின் வாரிசுகளாகப் பிறவி எடுத்துள்ளீர்கள். நீங்கள் அமரத்துவத்தின் அலைகள்; பொருட்களைச் சேர்த்து உண்டாக்கப் பட்ட உடல்கள் அல்ல. உலகியலான பொருட்கள் உங்கள் ஏவலுக்குப் பணிந்து உங்களுக்கு இங்கு சேவை செய்ய வந்தவையே; மாறாக நீங்கள் அவைகளுக்குச் சேவை புரிய அல்ல. வேதங்கள், அச்சுறுத்தும் விதிகள், கட்டுப் பாடுகள் மற்றும் சட்டங்களின் ஒரு மூட்டையை விதித்துள்ளன என எண்ணாதீர்கள். ஒவ்வொரு விதியும், சட்டத்தையே அளிப்பவனாகிய இறைவன், உங்களுக்குக் கொடுத்தவையாகும்.பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து கூறுகளும், ஒவ்வொரு இடத்தில் இருக்கும் ஒவ்வொரு துகளும், ஒவ்வொரு கணமும், இறைவனது கட்டளைக்கு ஏற்ப இயங்குகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள் ! இப்படிப் பட்ட ஒரு இறைவனுக்கு சேவை ஆற்றுவதை விட உயர்ந்த அல்லது அதிகப் பயனளிக்க வல்ல ஆராதனை எதுவும் இல்லை. இறைவனுக்கு, இந்த இகத்திலும், பரத்திலும் உள்ள எதன் மீதும் ஒருவர் கொள்ளும் ப்ரேமையை விட, அதிகமான ப்ரேமையை ஒருவர் அர்ப்பணிக்க வேண்டும். அவனை மட்டுமே ஒரே ஒருவனாக நேசிக்க வேண்டும். இப்படிப் பட்ட ப்ரேமையுடன் அவனை எப்போதும் போற்றி நினைவில் கொள்ளுங்கள்!
உங்கள் வாழ்க்கையைப் புனிதமாக்குவதற்குத் தேவைப்படுபவை, இறைவன் பால் ப்ரேமை( தெய்வ ப்ரீதி ) மற்றும் பாவத்தைக் கண்டு அச்சம்( பாப பீதி) என்ற இரண்டு மட்டுமே- பாபா