azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 07 Jun 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 07 Jun 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

The bamboos in a thicket that grow densely in a forest may rub against each other and this could start a fire. The fire that is so generated will become bigger and bigger as a result of the breeze. Gradually it will become a big forest fire destroying the entire forest. So also some people, as a result of their educational attainments, power, wealth and position develop a great deal of ego. Because of this ego, they give a lot of trouble to good people and sadhakas around them. Beware and examine your ego everyday! To protect the virtuous and re-establish dharma, God takes a human form from age to age. Avatars appear time and again only to help human beings, by leading an exemplary life and demonstrating how to lead a good life. Remember, whatever God does, it is always for our own good. All His actions are intended for our good. Recognise this truth and conduct yourselves accordingly. (Ch 9, Summer Showers 1978)
IT IS TO TEACH HUMANITY THE WAY OF LOVE THAT AVATARS COME IN THE WORLD. - BABA
ஒரு காட்டில் அடர்த்தியாக வளரும் மூங்கில் புதர்கள் ஒன்றுக்கு ஒன்று உரசிக் கொள்ளும்; இது ஒரு தீயை வளர்க்கக் கூடும். இப்படி உருவாக்கப் பட்ட தீ, காற்றின் காரணமாக மேலும் பெரிதாகி விடும். படிப்படியாக இது ஒரு காட்டுத் தீயாக மாறி, காடு முழுவதையும் அழித்து விடும். அதைப் போலவே, சில மனிதர்கள், அவர்களது கல்விச் சாதனைகள், அதிகாரம்,செல்வம் மற்றும் பதவியின் காரணமாக, ஒரு பெரிய அளவில் அகந்தையை வளர்த்துக் கொண்டு விடுவார்கள். இந்த அகந்தையின் காரணமாக, அவர்கள் தங்களைச் சுற்றி உள்ள நல்லவர்கள் மற்றும் ஆன்மிக சாதகர்களுக்கு மிகுந்த துன்பத்தை அளிப்பார்கள். ஜாக்கிரதை, உங்கள் அகந்தையை அனுதினமும் ஆராயுங்கள்! நல்லவர்களைக் காப்பதற்கும், தர்மத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்கும், இறைவன் யுக, யுகமாக, மனித உருவம் எடுத்து வருகிறான். ஒரு உதாரணமான வாழ்க்கையை நடத்தி, ஒரு நல்ல வாழ்க்கையை எப்படி நடத்த வேண்டும் என எடுத்துக் காட்டுவதன் மூலம், அவதாரங்கள் மனிதர்களுக்கு உதவுவதற்காகவே திரும்பத் திரும்பத் தோன்றுகின்றன. இறைவன் எதைச் செய்தாலும் அது எப்போதும் நமது சொந்த நலனுக்காகவே என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவனது அனைத்து செயல்களும் நமது நன்மையைக் கருதியே. இந்த உண்மையை உணர்ந்து அதற்கு ஏற்றவாறு நடந்து கொள்ளுங்கள்.
அன்பின் பாதையை மனிதகுலத்திற்குப் போதிப்பதற்காகவே, அவதாரங்கள், இந்த உலகில் வருகின்றன. - பாபா