azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 03 Jun 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 03 Jun 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
The tree can spread its branches wide. But the branches can put forth blossoms that yield fruit only when the roots are fed with water. Instead, if the water is poured on the branches, fruits, and flowers, how can the tree grow and spread? The roots for the peace and prosperity of society are the qualities of devotion and dedication. Hence the educational system must pay attention to the promotion and strengthening of these qualities among the people. People who occupy positions of authority are named adikaris (officials). That word can also mean the worst enemy, adhika-ari! True officials should carefully avoid that course and use their positions to serve people under their care. The ancients grasped the supreme truth only after personally experiencing its validity. The moderns, however, dismiss their discoveries. This is the reason for the growth of barbarism in the so-called civilised countries. Many have not recognised this fact. (Vidya Vahini, Ch 11)
LOVE FOR GOD (DAIVA-PREETI) AND FEAR OF SIN (PAPA-BHEETI) ARE THE ONLY
TWO REQUISITES NEEDED TO SANCTIFY YOUR LIFE. - BABA
மரம், அதன் கிளைகளை அகலமாகப் பரவச் செய்ய முடியும். ஆனால், வேர்களில் நீர் பாய்ச்சினால் மட்டுமே, கிளைகள், பழங்களைத் தரக் கூடிய மலர்களை மலரச் செய்ய முடியும். அதற்கு பதிலாக,கிளைகள், பழங்கள் மற்றும் மலர்களின் மீது நீரைக் கொட்டினால், மரம் எப்படி வளர்ந்து, பரவ முடியும்? சமுதாயத்தின் சாந்தி மற்றும் வளமைக்கான வேர்கள், பக்தி மற்றும் சிரத்தை எனும் குணங்களாகும். எனவே, மக்களிடையே இந்த குணங்கள் வளர்ந்து, வலிமை பெறுவதில், கல்வி முறை கவனம் செலுத்த வேண்டும். அதிகார பதவிகளை வகிப்பவர்கள் அதிகாரிஸ் எனப் படுகிறார்கள். அந்த வார்த்தைக்கு, மிகவும் கொடிய எதிரி, அதாவது, அதிகா-அரி எனவும் பொருள் கொள்ளலாம்! உண்மையான அதிகாரிகள் அந்தப் பாதையைத் தவிர்த்து, தங்களது பதவிகளை, அவர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட மக்களுக்குச் சேவை செய்வதற்குப் பயன் படுத்த வேண்டும். நமது முன்னோர்கள் இந்த தலை சிறந்த உண்மையை, அதன் நம்பகத் தன்மையை தாங்களே அனுபவித்த பின்னர் மட்டுமே புரிந்து கொண்டார்கள். இருப்பினும், நவீன காலத்தவர், அவர்களது கண்டுபிடிப்புகளை, நிராகரிக்கிறார்கள். நாகரிக நாடுகள் என்று அழைக்கப் படுபவைகளில் காட்டுமிராண்டித்தனத்தின் வளர்ச்சிக்கு இதுவே காரணம். இந்த உண்மையைப் பலர் உணரவில்லை.
உங்கள் வாழ்க்கையைப் புனிதமாக்குவதற்குத் தேவைப்படுபவை, இறைவன் பால் ப்ரேமை( தெய்வ ப்ரீதி ) மற்றும் பாவத்தைக் கண்டு அச்சம்( பாப பீதி) என்ற இரண்டு மட்டுமே- பாபா