azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 29 May 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 29 May 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Praise and blame appear to be contradictory to each other, but they are not! That which takes you to a respectable position will also bring you down! As you are being praised, blame is growing along. When we dig a well, a heap of mud will also grow alongside. The deeper we go into the well, the higher will the accumulated mound be. We think that the hole, which corresponds to the deep well, is blame while the heap corresponds to praise. But when we put the heap of mud into the well, it gets closed. The mud from the well and the mud in the heap are the same. Once we realise that this is so, we will not be afraid of criticism or blame. We will develop an equal-minded attitude for praise and blame. Some people will look at the depth of the well while others look at the height of the mound. The correct attitude will be to look at both with the same mind. Only then will one be able to progress along the sacred path. (Ch 21, Summer Showers 1978)
HOT AND COLD, PLEASURE AND PAIN, PRAISE AND BLAME ARE TWO SIDES OF THE SAME COIN. - BABA
போற்றுதலும், தூற்றுதலும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டதாகத் தோன்றுகின்றன; ஆனால் அவை அப்படி அல்ல. உங்களை ஒரு மரியாதையான நிலைக்கு எது எடுத்துச் செல்கிறதோ, அதுவே உங்களை கீழே சாய்க்கவும் செய்யும்! நீங்கள் போற்றப் படும்போதே, தூற்றுதலும் கூடவே வளர்ந்து கொண்டு வரும். நாம் ஒரு கிணறைத் தோண்டும்போது, ஒரு மண் குவியலும் பக்கத்திலேயே வளர்ந்து கொண்டு வரும். நாம் எவ்வளவு ஆழமாக கிணற்றுக்குள் செல்கிறோமா, திரட்டப்படும் குவியலும் உயரமாகிக் கொண்டே வரும். ஆழ்ந்த கிணறைக் குறிக்கும் பள்ளமே தூற்றுதல் என்றும், மண் குவியலே போற்றுதல் என்றும் நாம் எண்ணுகிறோம். ஆனால், நாம் மண் குவியலைக் கிணற்றில் போட்டு விட்டால், அது மூடி விடுகிறது. கிணற்றில் இருந்த மண்ணும், குவிக்கப் பட்ட மண்ணும் ஒன்றே. இது இப்படித் தான் என்று ஒருமுறை நாம் உணர்ந்து விட்டால், நாம் விமரிசனம் அல்லது தூற்றுதலைப் பற்றி அச்சம் கொள்ள மாட்டோம். நாம், போற்றுதல் மற்றும் தூற்றுதலுக்கு ஒரு சமச்சீரான மனப்பாங்கினை வளர்த்துக் கொள்வோம். சில மக்கள், கிணற்றின் ஆழத்தைப் பார்ப்பார்கள்; அதே சமயம் மற்றவர்கள் மண் குவியலின் உயரத்தைப் பார்ப்பார்கள். இரண்டையும் ஒரே விதமான மனதுடன் நோக்குவதே சரியான மனப்பாங்காகும். அதன் பிறகே, ஒருவர் புனிதமான பாதையில் முன்னேற முடியும்.
வெப்பம் மற்றும் குளிர்ச்சி,இன்பம் மற்றும் துன்பம், போற்றுதல் மற்றும் தூற்றுதல் ஆகியவை ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களே- பாபா