azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 28 May 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 28 May 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
When what really exists is only One, there is no room for any difference in attitudes. The same life force that is present in an elephant is also present in a dog or in a cow. Since this life force present in all jivas is one and the same, we observe that everything is an aspect of the divine. So long as you have the feeling of ownership or keep saying, “Mine, Mine, Mine,” you will not have a chance to observe things other than yours. As long as you have this attitude you will never be able to understand what is not yours. On the day when you give up this idea, you will really understand this aspect of equanimity. You must reduce your attachment to things. So long as jealousy and ego are uppermost in your mind, God will be at a distance from you. When you are able to get rid of these qualities, God will come close to you. (Ch 21, Summer Showers in Brindavan 1978)
SO LONG AS YOU HAVE THE FEELING THAT YOU ARE SEPARATE FROM GOD, YOU HAVE TO PRAY.ONCE YOU REALISE THAT YOU ARE ONE WITH HIM, YOU NEED NOT PRAY. - BABA
எப்போது, இருப்பது என்பது உண்மையில் ஒன்றே ஒன்று தான் எனும் போது, மனப்பாங்குகளில், எந்த விதமான வித்தியாசங்கள் இருப்பதற்கும் இடமே இல்லை. ஒரு யானைக்குள் இருக்கும் உயிர் சக்திதான் ஒரு நாய் அல்லது ஒரு பசுக்குள்ளும் இருக்கிறது. அனைத்து ஜீவ ராசிகளுக்குள்ளும் இருக்கும் இந்த உயிர் சக்தி ஒன்றே தான் என்பதால், நாம் ஒவ்வொன்றும் தெய்வீகத்தின் அம்சம் என்பதைக் காண்கிறோம். உங்களுக்கு உடமையின் உணர்வு இருக்கும் வரையிலோ அல்லது நீங்கள், ‘’ என்னுடையது, என்னுடையது, என்னுடையது’’ என்று கூறிக்கொண்டு இருக்கும் வரையிலோ, உங்களுடையதைத் தவிர மற்ற பொருட்களை நோக்குவதற்கான ஒரு வாய்ப்பு உங்களுக்கு இருக்கப் போவதில்லை. இப்படிப் பட்ட மனப்பாங்கு உங்களுக்கு இருக்கும் வரையில், உங்களுடையது அல்லாதவற்றை, உங்களால் ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது. என்று நீங்கள் இந்தக் கருத்தை விட்டு விடுகிறீர்களோ, நீங்கள் சமச்சீரான மனப்பாங்கின் இந்த அம்சத்தை உண்மையிலேயே புரிந்து கொள்வீர்கள். பொருட்களின் மீதான பற்றினை நீங்கள் குறைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் மனதில் பொறாமையும், அகந்தையும் தலை தூக்கி நிற்கும் வரை இறைவன் உங்களிடமிருந்து விலகியே இருப்பான். எப்போது உங்களால் இந்த குணங்களை விட்டொழிக்க முடிகிறதோ, இறைவன் உங்களை நெருங்கி வருவான்.
நீங்கள் இறைவனிடமிருந்து வேறுபட்டவர் என்ற உணர்வு இருக்கும் வரை, நீங்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும். ஒருமுறை நீங்களும் அவனும் ஒன்றே என்பதை உணர்ந்து விட்டால், நீங்கள் பிரார்த்தனை செய்யத் தேவையில்லை- பாபா