azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 13 May 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 13 May 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Activity (karma) that binds is a huge fast growing tree. The axe that can cut its roots is this: Do every act as an act of worship to glorify the Lord. This is the real sacrifice (yajna), the most important ritual. This sacrifice promotes and confers knowledge of Brahman (Brahma-vidya). Note that the yearning to do selfless service must flow in every nerve of the body, penetrate every bone and activate every cell. Those who engage themselves in spiritual discipline (sadhana) must have mastered this attitude toward service. Where there is no harshness, holiness will thrive and virtue will flourish. Where greed exists, vice will breed thick! Selfless service (seva) is the blossom of love (prema), a flower that fills the mind with rapture. Harmlessness is the fragrance of that flower. Render service to others without expecting anything in return. Let even your tiny acts be filled with compassion and reverence; be assured that your character would thereby shine great! (Ch 8, Vidya Vahini).
EVERY ACTION OF YOURS MUST HAVE THE STAMP OF QUALITY THAT IS ACCEPTABLE TO GOD. RIGHTEOUS LIVING ALONE CONFERS HAPPINESS HERE AND HEREAFTER. - BABA
நம்மைப் பிணைக்கும் கர்மா என்பது ஒரு மிகப் பெரிய வேகமாக வளரும் மரம் போன்றதாகும். இதன் வேர்களை வெட்ட வல்ல கோடாரி இதுவே;ஒவ்வொரு செயலையும், இறைவனைப் போற்றும் செயலாகச் செய்யுங்கள்.இதுவே, மிகவும் முக்கியமான சடங்கான, உண்மையான வேள்வி ( யக்ஞம்) ஆகும்.இந்த யக்ஞம், பரப்ரம்மத்தைப் பற்றிய அறிவைப் (ப்ரம்ம-வித்யா) பேணி, அளிக்கிறது. தன்னலமற்ற சேவை ஆற்ற வேண்டும் என்ற தாபம் உடலின் ஒவ்வொரு நரம்பிலும் பெருக்கெடுத்து ஓடி,ஒவ்வொரு எலும்பிலும் ஊடுருவி, ஒவ்வொரு செல்லையும் இயக்க வேண்டும் என்பதைக் குறித்துக் கொள்ளுங்கள். ஆன்மிக சாதனையில் ஈடுபட்டு இருப்பவர்கள் சேவையைக் குறித்த இந்த மனப்பாங்கில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.கடுமை எங்கு இல்லையோ, அங்கு புனிதத்துவம் வளர்ந்து, ஒழுக்கம் செழிப்படையும்.பேராசை இருக்கும் இடத்தில்,ஒழுங்கீனம் வேகமாக வளரும் !தன்னலமற்ற சேவை என்பது , மனதை மயங்கச் செய்யும் ப்ரேமையின் மலராகும். தீங்கிழைக்காமை, அந்த மலரின் நறுமணமாகும்.எந்த விதமான எதிர்பார்ப்பும் இன்றி, பிறருக்கு சேவை ஆற்றுங்கள். உங்களது சிறிய சிறிய செயலும் கூட கருணை மற்றும் பயபக்தியால் நிரம்பி இருக்கட்டும்; உங்களது குணநலன் மிகச் சிறந்து ஒளிர் விடும் என்பதில் ஐயமே இல்லை!
உங்களது ஒவ்வொரு செயலிலும், அதை இறைவன் ஏற்றுக் கொள்வதற்கான தர முத்திரை இருக்க வேண்டும். தார்மிகமான வாழ்க்கை மட்டுமே இகத்திலும், பரத்திலும் சுகத்தை அளிக்கும்- பாபா