azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 08 May 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 08 May 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Embodiments of Love! If you wish to become eligible for God’s love, then your actions must be consistent with love. It is impossible to secure God’s love without appropriate and sacred actions. Can the one who is always hankering after rewards be ever truly happy? The only compensation you ought to seek is the pleasure and joy of doing your duty properly. The joy of service is the true reward! If you go against the command of God, then everything is bound to go wrong! As is the feeling, so is the result! Hence, those desiring God’s love, must ensure that they act in an appropriate manner! To receive God’s love, tell yourself, “I am doing this job as an offering to Him”. Install this feeling in your heart and do whatever you want to or have to. However before rushing to adopt this course, pause, reflect, and make sure that God would really be pleased with what you are trying to do and offer to Him! (Summer Showers May 24, 2000)
EVERY ACTION OF YOURS MUST HAVE THE STAMP OF QUALITY THAT IS ACCEPTABLE TO GOD. RIGHTEOUS LIVING ALONE CONFERS HAPPINESS HERE AND HEREAFTER. - BABA
ப்ரேமையின் திருவுருவங்களே! நீங்கள் இறைவனது ப்ரேமைக்கு உகந்தவர்களாக ஆக விரும்பினால்,உங்களது செயல்கள் ப்ரேமைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். பொருத்தமான மற்றும் புனிதமான செயல்கள் இல்லாமல் கடவுளின் அன்பைப் பெறுவது சாத்தியமில்லை. பரிசுகளுக்காக எப்போதும் அலைந்து திரியும் ஒருவர் என்றாவது மகிழ்ச்சியாக இருக்க முடியுமா? உங்களது கடமையை சரிவரச் செய்வதில் கிடைக்கும் சுகம் மற்றும் மகிழ்ச்சி ஒன்றே நீங்கள் நாட வேண்டிய நஷ்ட ஈடாகும்.சேவையின் சந்தோஷமே உண்மையான பரிசாகும் ! நீங்கள் இறைவனின் ஆணைக்கு எதிராக நடந்து கொண்டால்,பின்னர் அனைத்தும் தவறாகவே போய் விடும் ! உணர்வு எப்படியோ, விளைவு அப்படியே! எனவே, இறைவனது ப்ரேமையை விரும்புவோர், அவர்கள் அதற்கேற்றபடி நடந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும்! இறைவனது ப்ரேமையைப் பெறுவதற்கு, உங்களுக்கு நீங்களே, ‘’ நான் இந்தப் பணியை இறைவனுக்கு ஒரு அர்ப்பணிப்பாகச் செய்கிறேன் ‘’ என்று கூறிக் கொள்ளுங்கள்.உங்கள் இதயத்தில் இந்த உணர்வைப் பதிவு செய்து கொண்டு, நீங்கள் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்களோ அல்லது என்ன செய்ய வேண்டுமோ ,அதைச் செய்யுங்கள். ஆனால், இந்த முறையைக் கடைப்பிடிப்பதற்கு முன், நிதானித்து,சிந்தித்து, நீங்கள் எதைச் செய்ய முயன்று ,அதை அவனுக்கு அர்ப்பணிக்க முற்படுகிறீர்களோ, அதனால், இறைவன் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைவான் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
உங்களது ஒவ்வொரு செயலிலும், அதை இறைவன் ஏற்றுக் கொள்வதற்கான தர முத்திரை இருக்க வேண்டும். தார்மிகமான வாழ்க்கை மட்டுமே இகத்திலும், பரத்திலும் சுகத்தை அளிக்கும்- பாபா