azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 04 May 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 04 May 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Work done with no concern or desire for profit, purely out of love or from a sense of duty, is true yoga. Such yoga destroys one’s animal nature and transforms one into a divine being. Serving others, visualising them as Atmas, will help one to progress; it will save one from sliding down from the spiritual stage attained. Selfless service (seva) is far more salutary than even vows and worship (puja). Service disintegrates the selfishness latent in you; it opens the heart wide and makes the heart blossom. So work done with no desire is the supreme ideal; and when the mansion of life is built on that foundation, through the subtle influence of this basis of selfless service, virtues will gather unto the person. Service must be the outer expression of inner goodness. And, as one undertakes selfless service more and more, one’s consciousness expands and deepens, and one’s true (Atmic) reality is more clearly experienced. (Vidya Vahini, Ch 8)
HUMILITY CAN BE BUILT ONLY ON A FOUNDATION OF CHARITY AND DETACHMENT. - BABA
எந்த வித எதிர்பார்ப்போ அல்லது லாபத்திற்கான ஆசையோ இன்றி, பரிசுத்தமான ப்ரேமையினால் மட்டுமோ அல்லது ஒரு கடமை உணர்வோடோ செய்யப்படுகின்ற பணியே, உண்மையான யோகமாகும்.இப்படிப் பட்ட யோகா ஒருவரது மிருக இயல்பை அழித்து அவரை ஒரு தெய்வீகமானவராக மாற்றி விடுகிறது. பிறரை ஆத்மாக்களே என உருவகித்து அவர்களுக்கு ஆற்றும் சேவை ஒருவர் முன்னேற உதவி புரிகிறது; அது, ஒருவர் இதுவரை சாதித்த ஆன்மிக நிலையிலிருந்து வீழ்ச்சி அடைந்து விடாமல் காக்கிறது. தன்னலமற்ற சேவை, விரதங்களையும், பூஜைகளையும் விடவே அதிகம் போற்றத் தக்கதாகும். உங்களுள் மறைந்திருக்கும் சுயநலத்தை, சேவை தவிடு பொடியாக்கி விடுகிறது; அது இதயத்தை விசாலமாக்கி, அதை மலரச் செய்கிறது. எனவே, ஆசை எதுவும் இன்றி ஆற்றப்படும் பணியே தலை சிறந்த இலட்சியமாகும்; இப்படிப் பட்ட தன்னலமற்ற சேவையின் நுண்ணிய தாக்கத்தின் மூலம் வாழ்க்கை எனும் மாளிகை அந்த அஸ்திவாரத்தின் மீது கட்டப் படும் போது, ஒழுக்க சீலங்கள் ஒருவருள் சேர்ந்து விடுகின்றன. அகத்தில் உள்ள நல்லவற்றின் வெளிப்பாடே, சேவையாக இருக்க வேண்டும். மேலும், ஒருவர், தன்னலமற்ற சேவையை மேலும் மேலும் மேற்கொள்ளும் போது,ஒருவரது உள்ளுணர்வு விசாலமாகி, ஆழ்ந்து செல்வதால், ஒருவரது உண்மையான நிலையான ஆத்மா மேலும் தெளிவாக அனுபவமாகிறது.
தொண்டு மற்றும் பற்றின்மையின் ஒரு அடித்தளத்தின் மீது தான்
பணிவு என்பதை நிலை நிறுத்த முடியும்- பாபா