azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 02 May 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 02 May 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
By his devoted service to his mother and father, Dharmavyadha won eternal fame. Through consistent adherence to truth, Rama and Harischandra made themselves immortal. By means of right conduct, mere men rose to the position of great sages (maha-purushas). Buddha desisted from harm to living beings. He spoke of nonviolence (ahimsa) as “the highest morality (paramo dharmah)”. So he was revered as a world teacher. The mind is the foremost of the three inner instruments in man (thri-karanas). We must protect the mind so that attachment, passion, and excitement do not enter. These extremes are natural to the mind. The waves that rise in fury in it are the six inner foes of man: lust, anger, greed, attachment, pride, and envy. The first two bring the remaining four in their trail. To release ourselves from the first two and thus proceed on the spiritual path, we have to practise spiritual discipline. We learn these practices through spiritual learning (vidya). (Vidya Vahini, Ch 7)
KEEP THE NAME OF THE LORD ALWAYS RADIANT ON YOUR TONGUE AND MIND,
WHICH WILL KEEP THE ANTICS OF THE MIND UNDER CONTROL. - BABA
தாய், தந்தையருக்கு அவர் ஆற்றிய பக்தி பூர்வமான சேவையின் மூலம் தர்மவ்யாதா நிரந்தரமான புகழை அடைந்தார்.சத்தியத்தைத் தொடரந்து கடைப்பிடித்ததன் மூலம் ஸ்ரீராமரும்,ஹரிச்சந்திரனும் தங்களை அமரர்களாக ஆக்கிக் கொண்டனர்.தார்மீகமான நடத்தையின் மூலம் சாதாரண மனிதர்கள் தலை சிறந்த முனிவர்களின்( மஹா-புருஷாஸ்) நிலைக்கு உயர்ந்தனர். புத்த பகவான், ஜீவராசிகளுக்குத் துன்பம் விளைவிப்பதைத் தவிர்த்தார்.அவர், அஹிம்ஸையை ‘’ தலை சிறந்த தர்மமாக ( பராமோ தர்மஹ )’’ என விவரித்தார். எனவே தான் அவர் ஒரு லோக குருவாக போற்றப் படுகிறார். மனமே, மனிதனின் மூன்று அக உபகரணங்களில் (திரிகராணாஸ்) முதன்மையானதாகும். பற்றுதல், தீவிர ஆசை மற்றும் மனக்கிளர்ச்சி ஆகியவை புகுந்து விடாமல் நாம் மனதைக் காக்க வேண்டும். இந்த உச்ச நிலைகள் மனதிற்கு இயற்கையானவை.அதில் ஆர்ப்பரித்து எழும் அலைகளே மனிதனின் அக எதிரிகளான, காமம், க்ரோதம், லோபம், மோஹம், மதம் மற்றும் மாத்ஸர்யம் ஆகியவையாகும். இதில் முதல் இரண்டும், மீதி நான்கையும் கூடவே இழுத்து வருகின்றன.இந்த முதல் இரண்டிலிருந்து நம்மை விடுவித்துக் கொண்டு, ஆன்மிகப் பாதையில் செல்வதற்கு, நாம் ஆன்மிக சாதனையை மேற்கொள்ள வேண்டும். இந்த ஆன்மிக சாதனைகளை, ஆன்மிகக் கல்வியின் ( வித்யா) மூலம் நாம் கற்றுக் கொள்கிறோம்.
இறைநாமத்தை எப்போதும் உங்கள் நாவிலும், மனதிலும் ஒளிவிட்டுப் பிரகாசிக்குமாறு வைத்துக்கொள்ளுங்கள்; அது மனதின் கோமாளித்தனங்களைக் கட்டுக்குள் வைத்திருக்கும். - பாபா