azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 01 May 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 01 May 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
![Beloved Bhagawan Sri Sathya Sai Baba](/baba/2020/05-2020/htmls/photos/TFD 01.05.2020/baba1.jpg)
Live a regulated and disciplined life. Real education must train one to observe these limits and restrictions. We take great pains and suffer privations to master worldly knowledge. We follow some regimen with strict care in order to develop the physique. Whatever our objective, we obey an appropriate code of discipline. What exactly are the gains of disciplined thought and conduct? The rules and regulations are elementary at first. Then, they enable one to be aware of regions beyond the reach of the senses. Later, one can journey beyond the reach of one’s mind, and beyond even the outermost walls of what is reachable by all powers enclosed in the human body. Finally, one realises and experiences the truth of Truth, namely, one is the One that is immanent in all, that is, in the entire cosmos. One is filled with bliss when fixed in this faith and in this awareness. (Vidya Vahini, Ch 7)
DISCIPLINE IS THE MARK OF INTELLIGENT LIVING. - BABA
ஒரு கட்டுப்பாடான மற்றும் ஒழுக்கமான வாழ்க்கையை வாழுங்கள்.இந்த வரம்புகள் மற்றும் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பதற்கான பயிற்சியை, உண்மையான கல்வி ஒருவருக்கு அளிக்க வேண்டும்.உலகியலான அறிவைப் பெறுவதற்கு நாம் மிகுந்த முயற்சிகளை மேற்கொண்டு அதற்காகப் பாடுபடுகிறோம்.நல்ல உடல் பலத்தைப் பெறுவதற்கு நாம் சில பத்தியங்களை கட்டுப்பாடான கவனத்துடன் மேற்கொள்கிறோம். நம்முடைய குறிக்கோள் எதுவாக இருந்தாலும், நாம் அதற்கே உரித்தான கட்டுப்பாடு விதியை அனுசரிக்கிறோம். கட்டுப்பாடான சிந்தனை மற்றும் செயலால் கிடைக்கும் பயன்கள் என்ன? விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் ஆரம்பத்தில் சாதாரணமானவை. பின்னர், அவை, ஒருவருக்கு தனது புலன்களின் பிடிகளுக்கு அப்பாற்பட்ட பிரதேசங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன. பின்னர், ஒருவர், தனது மனதிற்கு அப்பாற்பட்டும், மனித உடலின் பொதிந்திருக்கும் அனைத்து சக்திகளாலும் அடையக் கூடியவற்றின் வெளிப்புறச் சுவர்களையும் கூடத் தாண்டியும், பயணிக்க முடிகிறது. இறுதியாக, ஒருவர்,இந்த பிரபஞ்சம் அனைத்திலும் உறையும் அந்த ஒன்றே ஒன்றான சத்தியத்தின் சத்தியத்தை உணர்ந்து, அனுபவிக்கிறார். இந்த நம்பிக்கை மற்றும் விழிப்புணர்வில் ஒருவர் நிலை கொண்டு விடும்போது, ஒருவர் ஆனந்தத்தால் நிரம்பி வழிகிறார்.
கட்டுப்பாடே, புத்திசாலித்தனமாக வாழ்வதின் அடையாளச் சின்னமாகும் - பாபா