azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 28 Apr 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 28 Apr 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Many people interpret renunciation to mean either giving away money and land as charity or performing rituals or sacrifices (yajna or yaga), or giving up hearth, home, wife, and children and proceeding to the forest. But renunciation does not mean such gestures of weak mindedness. These are not as difficult to give up as they are believed to be. The real renunciation is the giving up of desire. This is the real goal of a person’s existence, the purpose of all his efforts. It involves giving up lust, anger, greed, hatred, etc. The fundamental renunciation should be that of desire. The other feelings and emotions are its attendant reactions. Desire implies the presence of lust, anger, greed, etc. These latter are veritable gateways to hell. Envy is the bolt, and pride is the key. Unlock and lift the bolt, and you can enter in. (Vidya Vahini, Ch 4)
PRACTISE DETACHMENT FROM NOW ON; PRACTISE IT LITTLE BY LITTLE, FOR A DAY WILL COME SOONER OR LATER WHEN YOU WILL HAVE TO GIVE UP ALL THAT YOU HOLD DEAR. - BABA
பல மனிதர்கள், பணம் மற்றும் நிலத்தைத் தானமாகத் தருவது அல்லது யாக, யக்ஞங்களைச் செய்வது அல்லது வீடு, வாசல்,மனைவி, மக்களைத் துறந்து காட்டிற்குச் செல்வது ஆகியவற்றையே துறவு எனப் புரிந்து கொள்கிறார்கள். ஆனால், துறவு என்பதன் பொருள், இப்படிப்பட்ட பலஹீனமான மனதின் செயல்பாடுகள் அல்ல. இவைகளை விட்டு விடுவது என்பது, நம்பப்படுவதைப் போல, அவ்வளவு கடினமானவை அல்ல. உண்மையான துறவு என்பது ஆசையை விட்டு விடுவது தான். இதுவே ஒருவரின் வாழ்க்கையின் உண்மையான குறிக்கோளும், அவரது அனைத்து செயல்களின் நோக்கமும் ஆகும். காம, க்ரோத, லோப,மோஹ, மத, மாத்ஸர்யங்களை விட்டு விடுவதில் தான் அது இருக்கிறது. அடிப்படையில் துறவு என்பது ஆசையை விட்டுவதே.பிற உணர்வுகளும், உணர்ச்சிகளும் அதைச் சார்ந்தவையே,ஆசையே, காமம், க்ரோதம், மோஹம் போன்றவை இருப்பதைக் காட்டுகிறது.இவையே, நரகத்திற்கான நிச்சயமான வாயில்கள் ஆகும். பொறாமையே தாழ்ப்பாள், தற்பெருமையே சாவி. சாவியைப் பயன்படுத்தித் திறந்து, தாழ்ப்பாளை நகர்த்துங்கள், நீங்கள் நரகத்திற்குள் செல்ல முடியும்.
இப்போதிலிருந்தே பற்றுதலை விடப் பழகிக் கொள்ளுங்கள்; கொஞ்சம்,கொஞ்சமாகப் பழக்கப் படுத்திக் கொண்டு வாருங்கள், ஏனெனில், என்றாவது ஒருநாள், நீங்கள் பிரியமானவை என்று பிடித்துக் கொண்டு இருக்கும் அனைத்தையும் விட்டு விட வேண்டி இருக்கும் - பாபா