azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 27 Apr 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 27 Apr 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Moksha means liberation. Every living being is perforce an aspirant (mumukshu) for liberation, a practitioner of renunciation. Everyone has to be a renunciate (tyagi), versed in detachment. This is the final truth, the indisputable truth. When we give up our body and leave, we don’t take even a handful of earth with us. When we don’t learn to give up, upon death nature teaches us this great truth about the need and value of detachment and renunciation. So it is good to learn the lesson even before this happens. The person who learns and practises this truth is indeed blessed. Detachment is the second valuable virtue that spiritual learning (vidya) imparts (the first being the absence of pride and egotism). Empty a pot of the water that filled it, and the sky that one could see within the pot as an image or shadow gets lost along with the water. But the genuine sky enters the pot. So too, when that which is not Atma is discarded, Atma remains and liberation is attained. (Vidya Vahini, Ch 4)
HUMILITY CAN BE BUILT ONLY ON A FOUNDATION OF CHARITY AND DETACHMENT. - BABA
மோக்ஷம் என்றால் விடுதலை என்று பொருள். ஒவ்வொரு ஜீவராசியும் கட்டாயமாக, விடுதலையை நாடும் சாதகனே (முமுக்க்ஷூ), ஒரு துறவு மனப்பாங்கைக் கடைப்பிடிப்பவரே. ஒவ்வொருவரும் பற்றின்மையில் தோய்ந்த ஒரு துறவியாக (த்யாகி) இருக்க வேண்டும்.இதுவே இறுதியான, மறுக்க முடியாத சத்தியமும் ஆகும். நாம், நமது உடலை விடுத்துச் செல்லும் போது, ஒரு கைப்பிடி மண்ணைக் கூட நம்முடன் எடுத்துச் செல்வதில்லை. நாம் விட்டு விடுதலைக் கற்றுக் கொள்ளாமல் இருக்கும் போது, இறப்பின் தருவாயில், இயற்கை நமக்கு, பற்றின்மை மற்றும் துறவு மனப்பாங்கின், மதிப்பு மற்றும் அவசியத்தின் இந்தப் பேருண்மையை புகட்டி விடுகிறது. எனவே, அது நிகழ்வதற்கு முன்பே, இந்தப் பாடத்தைக் கற்றுக் கொள்வது நல்லதாகும். இந்த சத்தியத்தை கற்றுக் கொண்டு கடைப்பிடிப்பவர் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப் பட்டவராவார். ஆன்மிகக் கல்வி (வித்யா) புகட்டும் இரண்டாவது விலைமதிப்புள்ள சீலம் பற்றின்மையே (முதலாவது தற்பெருமை மற்றும் அகம்பாவம் இன்மை). நீரால் நிரம்பியுள்ள ஒரு பானையைக் காலி செய்யுங்கள்; பானைக்குள் ஒரு உருவமாக அல்லது நிழலாகத் தெரிந்த வானம் அந்த நீருடனேயே மறைந்து விடுகிறது. ஆனால் உண்மையான வானவெளி அந்தப் பானைக்குள் நுழைந்து விடுகிறது. அதைப் போலவே, ஆத்மா அல்லாதவற்றை விட்டு விடும்போது, ஆத்மா மட்டுமே இருக்கிறது, விடுதலையும் (ஆத்ம சாக்ஷாத்காரம்) கிடைத்து விடுகிறது.
தொண்டு மற்றும் பற்றின்மையின் ஒரு அடித்தளத்தின் மீது தான்
பணிவு என்பதை நிலை நிறுத்த முடியும்- பாபா