azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 20 Apr 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 20 Apr 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Teachers must adopt the spiritual discipline (sadhana) of purifying their emotions in order to earn the status and authority of gurus. A true guru must guide their students to lead a worthy and happy life. And true students must respond with eagerness and adoration. Teachers are responsible for the nature and quality of the activities and character of their students. They have the opportunity to impress the youth through their scholarship and leadership. So they must keep clear of selfish aggrandisement and political manoeuvering and have only spiritual enlightenment as their ideal in life. The members of the teaching staff must move amongst themselves as brothers and sisters. Students will become aware of differences and rivalries between their teachers. Of course, differences are inevitable and may even be useful. But differences shouldn’t pollute mutual relations, hinder the progress of the institution, and adversely affect the processes of teaching and learning. Teachers must consult each other and cooperate with each other. (Chap 19, Vidya Vahini)
TEACHERS ARE RESERVOIRS FROM WHICH, THROUGH THE PROCESS OF EDUCATION,
THE STUDENTS DRAW THE WATER OF LIFE. - BABA
குருமார்களின் அந்தஸ்து மற்றும் அதிகாரத்தைப் பெறுவதற்கு, ஆசிரியர்கள், அவர்களது உணர்வுகளை பரிசுத்தமாக்கும் ஆன்மிக சாதனைகளை மேற்கொள்ள வேண்டும். அவர்களது மாணவர்கள் ஒரு உகந்த மற்றும் சந்தோஷமான வாழ்க்கை நடத்துவதற்கு ஏற்ப ஒரு உண்மையான குரு வழி காட்ட வேண்டும். மேலும் உண்மையான மாணவர்கள் ஆர்வத்தோடும், அர்ப்பணிப்பு உணர்வோடும் செயலாற்ற முன் வர வேண்டும். ஆசிரியர்களே, மாணவர்களின் குணாதிசியங்கள் மற்றும் அவர்களது செயல்களின் இயல்பு மற்றும் தரத்திற்குப் பொறுப்பாவார்கள். தங்களது புலமை மற்றும் தலைமையின் மூலம், இளைஞர்களைக் கவருவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு இருக்கிறது. எனவே, அவர்கள் சுய படாடோபம் மற்றும் அரசியல் சூழ்ச்சி ஆகியவற்றிலிருந்து விலகி இருந்து, ஆன்மிக விழிப்புணர்வை மட்டுமே தங்களது வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டிருக்க வேண்டும். ஆசிரியர்கள், தங்களுக்கு இடையில் சகோதர, சகோதரிகளைப் போலப் பழக வேண்டும். ஆசிரியர்களுக்கு இடையே உள்ள வித்தியாசங்கள் மற்றும் போட்டி மனப்பாங்குகளை மாணவர்கள் தெரிந்து கொண்டு விடுவார்கள். வித்தியாசங்கள் தவிர்க்க முடியாதவையே, ஒரு விதத்தில் பயனுள்ளவையும் கூட. ஆனால் இந்த வித்தியாசங்கள், பரஸ்பர உறவுகளைக் களங்கப் படுத்தவோ, நிறுவனத்தின் முன்னேற்றத்தைத் தடுக்கவோ,கற்பிக்கும் மற்றும் கற்பதன் முறைகளை மோசமாக பாதிக்கவோ கூடாது. ஆசிரியர்கள் ஒருவரை ஒருவர் கலந்து ஆலோசித்து, ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
ஆசிரியர்கள், கல்வி முறையின் மூலம், மாணவர்கள் வாழ்க்கை எனும் நீரை எடுத்துக் கொள்வதற்கான நீர்நிலைகள் போன்றவர்கள் - பாபா