azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 18 Apr 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 18 Apr 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Hands are not the only limbs or agents involved in human activity (karma). Whatever you do, see, or hear, you should be vigilant about its purity. Thought, word and deed must be free from pride, greed and hatred. The words that you utter must be free from these faults; things that you yearn to hear must be free from superficially attractive qualities; and the pleasure that you seek must not be polluted by evil. What enters the ear might not be clear to the mind; it might reach the mind only in a hazy form. So education has to be so imparted that it is received clearly by the mind. To achieve this aim, it has to be transmitted through heads, tongues, and hands that are pure, with no blemish that warps. Only then can the learning be clear and the wisdom bright. (Ch 19, Vidya Vahini)
BURY BAD THOUGHTS UNDER GOOD ONES. THEN THE BAD ONES
WILL FADE AWAY AND BE FORGOTTEN. - BABA
மனித செயல்பாடுகளில் (கர்மா) ஈடுபட்டு இருக்கும் அங்கங்கள் அல்லது கருவிகள், கரங்கள் மட்டுமே அல்ல. நீங்கள் செய்வது, காண்பது அல்லது கேட்பது எதுவானாலும், அவற்றின் பரிசுத்தத்தைப் பற்றி நீங்கள் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். சிந்தனை, சொல் மற்றும் செயல் ஆகியவை, தற்பெருமை, பேராசை மற்றும் த்வேஷம் இன்றி இருத்தல் வேண்டும். நீங்கள் கூறும் வார்த்தைகள் இந்தக் குறைகள் இன்றி இருக்க வேண்டும்; நீங்கள் கேட்க விழையும் விஷயங்கள் மேலோட்டமான கவர்ச்சி குணங்கள் அற்றவையாக இருக்க வேண்டும்; நீங்கள் நாடும் சுகங்கள் தீமையால் களங்கப்பட்டு இல்லாமல் இருக்க வேண்டும். காதில் நுழைபவை மனதிற்குத் தெளிவாக இல்லாமல் இருக்கலாம்; அது ஒரு தெளிவற்ற ரூபத்தில் மனதை அடையக் கூடும். எனவே, அது மனதைத் தெளிவாக அடைவதற்காக, கல்வி கற்பிக்கப் பட வேண்டும். இந்தக் குறிக்கோளை அடைவதற்கு, அது, பரிசுத்தமான, கறை படிந்திருந்தாத புத்திகள், நாக்குகள் மற்றும் கரங்களால் அளிக்கப்பட வேண்டும். அதன் பிறகு மட்டுமே, கற்பது என்பது தெளிவாகவும், அறிவு கூர்மையாகவும் இருக்கும்.
தீய சிந்தனைகளை, நற்சிந்தனைகளுக்கு அடியில் புதைத்து விடுங்கள். பின்னர் தீய சிந்தனைகள் மங்கி, மறந்து போய்விடும்- பாபா