azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 12 Apr 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 12 Apr 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Two different characteristics are to be found amongst people. One common characteristic is to delude themselves that they are good individuals with many virtues, intelligence and talent. The second category which is rare, is recognition of the good quality in others, their merits, abilities and good deeds, and appreciate their ideals. Jesus belonged to the second category. He saw the good qualities in others, rejoiced over their virtues and shared his joy with others. Jesus taught that God is Love and that the human birth should be used to realize the Indwelling Spirit! He declared that there was nothing great about returning good for good. People should do good even to those who harm them. Embodiments of Divine Love! Strike down the walls that separate you from another being. Get rid of all differences! Cultivate love in your hearts. Remember and worship the Lord with love. What kind of devotion is it if one does not practice the Lord’s teachings? (Divine Discourse, Dec 25, 1988)
REMEMBER THE LORD WITH LOVE. WORSHIP HIM WITH LOVE. SANCTIFY YOUR LIFE WITH LOVE. - BABA
மனிதர்களிடையே இரண்டு வித மாறுபட்ட குணாதிசியங்கள் காணப்படுகின்றன. தாங்கள் பல நல்லொழுக்கங்கள், புத்தி மற்றும் திறன் படைத்த நல்ல மனிதர்கள் என்று தங்களைத் தாமே ஏமாற்றிக் கொள்வது ஒரு பொதுவான குணாதிசியமாகும். மற்றவர்களிடம் உள்ள நற்குணங்கள், அவர்களது திறன்கள், திறமைகள் மற்றும் நற்செயல்கள் ஆகியவற்றை உணர்ந்து, அவர்களது இலட்சியங்களைப் பாராட்டுவது என்பது இரண்டாவது அரிதான வகையாகும். ஏசு கிருஸ்து இந்த இரண்டாவது வகையைச் சார்ந்தவர். அவர், பிறரிடம் உள்ள நல்ல குணங்களைக் கண்டு, அவர்களது நல்லொழுக்கங்களைக் கண்டு மகிழ்ந்து, தனது மகிழ்ச்சியை பிறருடன் பகிர்ந்து கொண்டார். ஏசு கிருஸ்து இறைவன் ப்ரேமையே என்றும், மனிதப் பிறவியை, உள்ளுறையும் ஆத்மாவை உணருவதற்குப் பயன்படுத்த வேண்டும் என்றும் போதித்தார்! நல்லவைக்கு, நல்லதைத் திருப்பிச் செய்வது ஒரு பெரிய விஷயம் இல்லை என்று பறைசாற்றினார். மனிதர்கள், தங்களுக்குத் தீமை செய்தவர்களுக்கும், நன்மையையே செய்ய வேண்டும். தெய்வீக ப்ரேமையின் திருவுருவங்களே! உங்களை மற்றொரு ஜீவனுடமிருந்து பிரித்து வைக்கும் சுவர்களை தகர்த்து எறியுங்கள். எல்லா விதமான வித்தியாசங்களையும் விட்டொழியுங்கள்! உங்கள் இதயங்களில் ப்ரேமையை வளர்த்துக் கொள்ளுங்கள். இறைவனை நினைவு கூர்ந்து, அவனை ப்ரேமையுடன் வழிபடுங்கள். இறைவனது போதனைகளை ஒருவர் பின்பற்றாமல் இருந்தால், அது எப்படி பக்தியாகும்?
இறைவனை ப்ரேமையுடன் நினைவு கூறுங்கள்;ப்ரேமையுடன் அவனை ஆராதியுங்கள். உங்கள் வாழ்க்கையை ப்ரேமையால் புனிதமாக்குங்கள் - பாபா